தினமலர் :சென்னை: உடல் நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதிக்கு 4வது நாளாக, தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளது. அவர் டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். தொண்டர்கள் அச்சப்பட தேவையில்லை என ஸ்டாலின் கூறியுள்ளார். கருணாநிதி நலமாக உள்ளதாகவும், தொண்டர்கள் அமைதியாக உள்ளதாகவும் துரைமுருகனும் கூறியுள்ளார். மருத்துவமனை வாசலில் தொண்டர்கள், இரவு பகலாக குவிந்துள்ளனர். அவர்கள் கருணாநிதிக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். இன்றும், பல தலைவர்கள் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதி உடல்நிலை குறித்து கேட்டறிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் ரஜினி, இன்று காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதி உடல்நிலை குறித்து கேட்டறிவார் எனக்கூறப்படுகிறது. அவரது உடல்நிலை குறித்த அறிக்கை, மருத்துவமனை சார்பில் இன்று வெளியாகலாம் எனக்கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம், கருணாநிதிக்கு அளிக்கும் சிகிச்சை தொடர்பாக, அழகிரி சில ஆலோசனைகளை, ஸ்டாலினிடம் தெரிவித்திருக்கிறார். அதற்கு ஸ்டாலின், 'அப்படியே செய்திடலாம்' என, சம்மதம் தெரிவித்துள்ளார்.
அண்ணனும், தம்பியும் நீண்ட இடைவெளிக்கு பின் பேசியதை பார்த்து, குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக