மின்னம்பலம்: பிளாஸ்டிக்
கழிவுகளால் மாசடையும் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தவிர்க்க பிளாஸ்டிக்
குப்பைகளைச் சேகரித்து மறுசுழற்சி மூலம் பிளாஸ்டிக் தார்ச்சாலை அமைக்க
மூலப்பொருட்கள் தயாரித்து சில மகளிர் சுய உதவிக்குழுக்கள் வருவாய் ஈட்டி
வருகின்றன.
மதுரை நாராயணபுரம் மற்றும் ஆத்திக்குளம் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் பேங்க் காலனியில் 2004ஆம் ஆண்டு முதல் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அமைத்து பெண்களுக்கு தையல் பயிற்சி, ஊறுகாய் தயாரித்தல் மற்றும் பயிற்சி வழங்குதல், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, எயிட்ஸ் விழிப்புணர்வு உள்ளிட்ட சமூகப் பணிகள் செய்து வருகின்றனர்.
கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 40 முதல் 60 மைக்ரான் கொண்ட மக்காத பிளாஸ்டிக் பை, பேப்பர்களைச் சேகரித்து, அதனை மறுசுழற்சி முறையில் பிளாஸ்டிக் தார்ச்சாலை அமைப்பதற்கான மூலப்பொருட்களைத் தயாரிக்கும் பணியில் மகளிர் குழுவைச் சேர்ந்த எட்டு பேர் ஈடுபட்டுள்ளனர். இதற்காக முறையாகப் பயிற்சிப் பெற்று மகளிர் திட்டத்தின் கீழ் வங்கியில் 2.75 லட்சம் கடன் உதவி பெற்று பிளாஸ்டிக் பேப்பர்களைத் தூசிகளை அகற்றி அரைக்கும் இரண்டு இயந்திரங்கள் வாங்கியுள்ளனர்.
பின்னர் தங்கள் பகுதியிலுள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள் மட்டுமல்லாமல் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரித்து, அவற்றை தரம் பிரித்து அரைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்காகச் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் குப்பைகளுக்கு தரம் வாரியாக ஒரு கிலோ 6 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை வழங்கியுள்ளனர். பிளாஸ்டிக் குப்பைகளை மறுசுழற்றி செய்து அரைக்கப்படும் பிளாஸ்டிக் கழிவு ஒரு கிலோ 30 ரூபாய்க்கு இந்த மகளிர் சுயஉதவி குழுவினர் விற்பனை செய்கின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக