புதன், 1 ஆகஸ்ட், 2018

இந்தியாவில் 13,657 பேர் கைகளால் மலம் அள்ளுபவர்கள்!... இந்த எண்ணிக்கை சரியா?


,மின்னம்பலம்: இந்தியாவில் கைகளால் மனிதக் கழிவுகளை அள்ளும் நிலைமை தற்போதும் தொடர்கிறது என மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மக்களவையில் சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பிற்கான அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே நேற்று மக்களவையில் எழுத்துபூர்வமாகப் பதில் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள தகவலின்படி, 2018ஆம் ஆண்டு ஜூன் மாதப்படி இந்தியாவில் உள்ள 13 மாநிலங்களில் ஏறத்தாழ 13,657 பேர் கைகளால் மனிதக்கழிவுகளை அள்ளும் நபர்கள் என அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலேயே உத்தரப் பிரதேசத்தில்தான் அதிகளவிலான மலம் அள்ளும் மக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அங்கு, 11,247 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் 738 பேரும், ராஜஸ்தானில் 338 பேரும், தமிழகத்தில் 363 பேரும் மனிதக்கழிவுகளை அள்ளுகின்றனர். ஆந்திரப் பிரதேசத்தில் 78 பேரும், அசாம் மாநிலத்தில் 154 பேரும், பிகாரில் 137 பேரும், சத்தீஸ்கரில் 3 பேரும், ஒடிசாவில் 237 பேரும், பஞ்சாபில் 91 பேரும், உத்தரகாண்டில் 137 பேரும், மேற்கு வங்கத்தில் 104 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஆய்வு நடத்தப்பட்ட 170 மாவட்டங்களில் 155 மாவட்டங்களில் ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: