ஞாயிறு, 29 ஜூலை, 2018

கலைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படங்கள் தெளிவான தகவல்கள்

வெங்கையா நாயுடு சந்திப்பு tamil.oneindia.com/veerakumaran.: கலைஞர்  உடல் நிலை நன்றாக இருக்கிறது... புகைப்படத்தில் தெளிவான தகவல்கள் சென்னை: திமுக தலைவர் கலைஞர்  காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் முதல் முறையாக இன்று வெளிப்படையாக வெளியிடப்பட்டுள்ளது.
மானிட்டரில் உள்ள தகவல் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு இன்று காவிரி மருத்துவமனைக்கு வந்திருந்தார். அவருடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் மருத்துவமனை சென்றார். அப்போது, கலைஞர்  சிகிச்சை பெறும் வார்டுக்குள் அவர்கள் சென்று பார்த்தனர்.
கலைஞரின்  குடும்பத்தார் தவிர்த்து வேறு ஒரு நபர் அவர் சிகிச்சை பெறும் இடம் வரை அனுமதிக்கப்பட்டது முதல் முறையாக இன்றுதான் நடந்தது.


வெங்கையா நாயுடு சந்திப்பு

கலைஞரை வெங்கையா நாயுடு சந்தித்து பார்த்தபோது போட்டோ எடுக்கப்பட்டு, அது கலைஞரின்  சமூக வலைத்தள பக்கங்கள் மூலமாக அட்மினால் வெளியிடப்பட்டது. ராஜாத்தி அம்மாள், ஸ்டாலின், கனிமொழி ஆகியோரும் புகைப்படத்தில் உள்ளனர். இதன் மூலம், கலைங்கருக்கு  வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்த தெளிவு அடிமட்ட தொண்டர்களுக்கும் ஏற்பட வாய்ப்பு உருவாக்கப்பட்டது.

செயற்கை சுவாசம் தேவையில்லை

செயற்கை சுவாசம் தேவையில்லை

கலைஞர்  செயற்கை சுவாசம் எனப்படும் வெண்டிலேட்டர் உதவியுடன் வைக்கப்பட்டுள்ளதாக வெளியான வதந்திகளுக்கு இப்போட்டோ முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஏனெனில் புகைப்படத்தில் கலைஞருக்கு கு செயற்கை சுவாசம் அளிக்கப்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

மானிட்டரில் உள்ள தகவல்

மேலும்,  கலைஞரின்  அருகேயுள்ள மானிட்டரில் காண்பிக்கும் காட்சிகளை வைத்து பார்த்தால், அவர் உடல்நிலை சீராக இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. ஆம். மேலோட்டமாக பார்த்தால் புகைப்படத்திலுள்ள மானிட்டர் கருப்பு வர்ணமாகத்தான் தெரியும். அதை ஜூம் செய்து பார்த்தால் அதில் கருணாநிதி உடல் நிலை பற்றிய தகவல்கள் இடம் பெற்றிருப்பதை கவனிக்க முடியும்.

மானிட்டர் சொல்வது என்ன?

மானிட்டர் சொல்வது என்ன?

மானிட்டரின் மேலே 94 என்று காண்பிப்பது நாடித்துடிப்பின் வேகம். அடுத்ததாக 97 என்ற எண், ரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு ஆகும். இதை saturation என்பார்கள். இயல்பாக ஒரு மனிதருக்கு, 94 முதல் 99 சதவீதம் இருக்கலாம்.
கலைஞருக்கு   97 சதவீதம் இருக்கிறது. எனவே இது மிகவும் சரியான அளவுதான். Respiratory rate என்று 3வதாக குறிப்பிடப்பட்டுள்ள எண் 30. இது ஒரு மனிதர் ஒரு நிமிடத்திற்கு சுவாசிக்க எடுத்துக்கொள்ளும் அளவை குறிப்பதாகும். 15 முதல் 18 வரை இது இருக்கலாம். ஆனால், கலைஞர் நிமிடத்திற்கு 30 முறை மூச்சை உள்ளிழுத்து விடுகிறார். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால்தான் கடந்த 2 வருடங்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.
 மற்றபடி கலைஞர்  உடல் நிலை நல்ல நிலையில் உள்ளது என்பதையே இந்த புகைப்பட மானிட்டர் காண்பிக்கும் தகவல்கள் உறுதி செய்கின்றன. அதே நேரம், முகத்தில் மாஸ்க் அணியாமல், இத்தனை பேர் மொத்தமாக ஐசியூ வார்டுக்குள் சென்றது தவறான செயல் என்று மருத்து நிபுணர்கள் கருத்து கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை: