Representatives of Sri Lanka President, Maithripala Sirisena, visited Kauvery hospital where former Tamil Nadu CM M Karunanidhi is undergoing treatment; submitted a letter from Sirisena to DMK working President MK Stalin wishing speedy recovery to Karunanidhiமாலைமலர் :கலைஞர் உடல்நலம் குறித்து கேட்டறிய மருத்துவமனை வந்த இலங்கை அமைச்சர் மற்றும் எம்.பி, இலங்கை அதிபரின் வாழ்த்து கடிதத்தையும் ஸ்டாலினிடம் வழங்கினர். #Karunanidhi #KarunanidhiHealth #MaithripalaSirisena சென்னை: காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கலைஞரை சந்தித்து உடல்நலம் விசாரிக்க பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், இன்று இலங்கை எம்.பி. ஆறுமுகன் தொண்டமான் மற்றும் அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தனர். கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் அவர்கள் கேட்டறிந்தனர். அப்போது, இலங்கை குடியரசு தலைவர் மைத்திரிபால சிறிசேனா எழுதிய வாழ்த்து கடிதத்தையும் அவர்கள் ஸ்டாலினிடம் கொடுத்தனர். “உலகத் தமிழர்களின் தலைவரான கருணாநிதி விரைவில் நலம் பெற வேண்டி இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்” என அவர்கள் இருவரும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக