விகடன் : கலிலுல்லா.ச
பாகிஸ்தான் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்ததையடுத்து, இம்ரான்
கான் தலைமையிலான தெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சி 116 தொகுதிகளில் வெற்றி
பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் கடந்த 25-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற்றது.
தேர்தல் களத்தில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம்
லீக் கட்சி, முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்
-இ- இன்சாஃப் கட்சி, பிலவால் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி
ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவியது. பாகிஸ்தானில் மொத்தம்
272 தொகுதிகள் உள்ளன. தனிப்பெரும்பான்மைக்கு 137 இடங்கள் தேவை. வாக்கு
எண்ணிக்கையின் போது பல்வேறு கட்சியினர் முறைகேடு நடப்பதாக குற்றம்சாட்டிய
நிலையில், இன்று தேர்தல் ஆணையம் தேர்தல் முடிவுகள் குறித்து அதிகாரபூர்வ
அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இம்ரான் கானின் தெஹ்ரீக் -இ- இன்சாஃப் கட்சி 116
தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. நவாஸ் ஷெரிஃப்பின் முஸ்லிம் லீக் கட்சி 64
இடங்களை பிடித்துள்ளது. பிலவால் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள்
கட்சி 43 இடங்களை பிடித்துள்ளது. முத்தஹிதா மஜ்லிஸ்-இ-அம்ல் கட்சி 13
இடங்களை வென்றுள்ளது. இதனால், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத
நிலை ஏற்பட்டிருக்கிறது. அதிக இடங்களில் வென்றுள்ள இம்ரான் கான், மற்ற
சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருகிறார்.
எம்.எம்.ஏ. என்னும் ராணுவக் கட்சியின் ஆதரவை இம்ரான் கான் நாடலாம் என்று
பாகிஸ்தான் ஊடகங்கள் கணித்துள்ளன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக