நீட் தேர்வுக்கு முழுக்கை சட்டத்தை அணிந்திருந்த மாணவர்களின் சட்டையை அரைக்கையாக கத்தரிக்கப்பட்ட பின்னரே அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
By: Lakshmi Priya சென்னை: நீட் தேர்வுக்கு முழுக்கை சட்டத்தை அணிந்திருந்த மாணவர்களின் சட்டையை அரைக்கையாக கத்தரிக்கப்பட்ட பின்னரே
அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மருத்துவ சேர்க்கைக்கான அகில இந்திய அளவிலான நீட் தேர்வு இன்று நாடெங்கும் நடைபெற்றது. இதில் தமிழகத்தை பொருத்தவரை 88,000 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். தமிழகத்தில் 8 நகரங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. முன்னதாக, இன்று காலை தங்கள் பிள்ளைகளை தேர்வு மையத்திற்கு விட வந்த பெற்றோர்களுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது.
நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்திருந்ததுதான். மைக்ரோ போன், கடிகாரம், காகிதத் துண்டுகள், பென்சில் பாக்ஸ் உள்ளிட்ட அனைத்து வித பாக்ஸ்களும் , பவுச், கால்குலேட்டர், பேனா, ஸ்கேல், அட்டை, பென் டிரைவ், ரப்பர், லாக் அட்டவணை, ஸ்கேனர் உள்ளிட்டவற்றை கொண்டு வரக் கூடாது.
பெண்கள் ,மோதிரம், தோடு, மூக்குத்தி, செயின், செயின் டாலர், பேட்ஜ், சட்டை பின், கைக் கடிகாரம், ப்ரேஸ்லெட், உள்ளிட்ட அணிகலன்களை பயன்படுத்தக் கூடாது. தலைக்கு ஹேர்பின் கூட குத்தக் கூடாது. ஆடையில் பெரிய பட்டன்களோ, பேட்ஜ்கள், பின்களோ, பூக்களோ இருக்கக் கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்த நிலையில் தலை பின்னி வந்த பெண்களின் கூந்தல் ஆராயப்பட்டு தோடு, முக்குத்திகளை கழற்றி கொடுத்த பின்னரே அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் தலைவிரி கோலமாக செ்ன்றனர். முழுக்கை சட்டை அணிதிருந்த ஆண்களையும், முழுக்கை, முக்கால் கை சுடிதார் மேலாடை அணிந்திருந்த பெண்களையும் அந்த துணியை அரைக்கையாக கத்தரியால் வெட்டிய பின்னரே அனுமதி வழங்கப்பட்டது. எனினும் இந்த கட்டுப்பாடுகளை ஒருசில மாணவர்கள் வரவேற்றனர் tamiloneindia

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக