புதன், 10 மே, 2017

அமைச்சர் சரோஜா பெண் அதிகாரி மீனாட்சியிடம் 30 லட்சம் லஞ்சம்.. அறையில் அடைத்து மிரட்டி வன்முறை ..

சரோஜா மீது புகார் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட பெண் அதிகாரியிடம் அவரது பணியை நிரந்தரமாக்க ரூ30 லஞ்சம் கேட்டு தமிழக அமைச்சர் சரோஜா கொலை மிரட்டல் விடுத்ததாக பெண் அதிகாரி மீனாட்சி கண்ணீருடன் குற்றம் சாட்டியுள்ளார். By: Mathi சென்னை: ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட தமது பணியை நிரந்தரமாக்க சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ரூ30 லட்சம் லஞ்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக பெண் அதிகாரி மீனாட்சி பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். தமிழக அமைச்சர்கள் மீது ஏகப்பட்ட புகார்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இதனாலேயே ஒட்டுமொத்த அதிமுக அரசும் டெல்லிக்கு பயந்து போய் கிடக்கிறது. எந்த நேரத்தில் எந்த அமைச்சர் கைது செய்யப்படுவாரோ? எவர் வீட்டில் ரெய்டு நடக்குமோ என பீதியில் உறைந்து போயுள்ளனர்.


 இந்த நிலையில் தருமபுரி மாவட்ட குழந்தைகள் நல பெண் அதிகாரி மீனாட்சி சன் நியூஸ் டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் தம்மிடம் லஞ்சம் கேட்டு சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா கொலை மிரட்டல் விடுத்ததாக கதறலுடன் புகார் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது சமூக சேவைகள் செய்து வந்த மீனாட்சியின் செயல்பாடுகள் அவரை ஈர்த்துள்ளது. இதையடுத்து மீனாட்சியை நேரில் அழைத்து அவருக்கு சமூக நலத்துறையில் தருமபுரி மாவட்ட குழந்தைகள் நல அதிகாரியாக ஒப்பந்த அடிப்படையிலான பணி வழங்கினார் ஜெயலலிதா. ஜெயலலிதா மறைந்த வரை மீனாட்சிக்கு எந்த சிக்கலும் வரவில்லை. ஜெயலலிதா மறைந்த நிலையில்தான் மீனாட்சியை பதவியை விட்டு போக வைக்க கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக சன் நியூஸ் டிவி சேனலுக்கு மீனாட்சி அளித்த பேட்டி: சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் சரோஜாவின் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமையன்று என்னை அழைத்தார். நான் பலமுறை சொல்லியும் வேலையை விட்டு ஏன் போகவில்லை என மிரட்டினார். மேலும் நீ இருக்கும் வேலை இப்போது ரூ30 லட்சம் வரை போகிறது. நீ பணம் கொடுத்துவிட்டு இந்த வேலையில் இரு... இல்லையெனில் போய்விடு... என கொலை மிரட்டல் விடுத்தார். எனக்கு அண்மையில்தான் அறுவை சிகிச்சை செய்த நிலையில் அமைச்சர் மிரட்டல் விடுத்தார். என் தனிப்பட்ட வாழ்க்கையையும் மிக கேவலமாக விமர்சித்தார். மேலும் வேலையை விட்டு போகவில்லை எனில் என்னுடைய நடத்தையை பற்றி கேவலமாக பரப்பிவிடுவேன்...

எங்கு போனாலும் அசிங்கப்படுத்துவேன் என்றார். ஜெயலலிதாவையும் ஒருமையில் விமர்சித்தார்.
நான் தேம்பி அழுதபோதும் என்னைவிடவில்லை. அமைச்சர் வீட்டில் இருந்து கதறியழுத நிலையில்தான் வெளியே வந்தேன்.
அமைச்சர் வீட்டு முன்பே நான் மயங்கி விழுந்தேன். சரோஜாவும் அவரது கணவரும் மாறி மாறி என்னை மிரட்டினர். நான் உயிர்பிழைத்து வந்ததே பெரிய விஷயம். இது தொடர்பாக முதல்வரை சந்திப்பதற்காக மாவட்ட அமைசர் தங்கமணியிடம் மனு கொடுத்துள்ளேன்.
இதற்கு அமைச்சர் சரோஜா வீட்டு சிசிடிவி காட்சிகளே சாட்சியமாம். கையில் இருக்கும் ஆதாரங்களுடன் ஆளுநர் மற்றும் பிரதமருக்கு புகார் கொடுக்க இருக்கிறேன். இவ்வாறு மீனாட்சி கதறலுடன் கூறினார்<  tamiloneindia

கருத்துகள் இல்லை: