தமிழகத்தை குண்டர்கள் ஆளும் நிலை ஒருபோதும் வந்துவிடக்கூடாது என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்
மே 13, புதுச்சேரியில் நடந்த அஞ்சல் துறைக் கட்டடத்திறப்பு விழாவில், கலந்து கொண்ட மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசுகையில், “உள்ளாட்சி தேர்தலில் கட்சியை பயன்படுத்திக் கொள்ள திமுக பாசாங்கு செய்கிறது. அவர்களின் பாசாங்கு ஒருபோதும் பலிக்காது. கருணாநிதியின் வைரவிழா அரசியல் ஆதாயத்துக்காக கொண்டாடப்படுகிறது. தவறு செய்பவர்களை அழைத்து வைரவிழா கொண்டாடப்படுகிறது, எனவே வைரவிழாவில் நாங்கள் நிச்சயம் கலந்து கொள்ள மாட்டோம். சாலை விபத்துகள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் மூடுவதற்கு டாஸ்மாக் உத்தரவிட்டது.
சாலைகளின் பெயரை மாற்றி தொடர்ந்து மதுக்கடை நடத்தப்படுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். புதுவை துறைமுகம், சென்னை துறைமுகம் இடையே சரக்கு போக்குவரத்தை கையாள்வது குறித்து ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. கொடநாடு விவகாரம் குறித்து உடனே விசாரணை வேண்டும். கொடநாடு கொலை மற்றும் கொள்ளை குறித்து முழுமையான விசாரணை உடனடியாக நடத்தப்பட வேண்டும். கொடநாடு விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது. இதனால் தமிழகத்தை குண்டர்கள் ஆளும் நிலை வந்துவிடக்கூடாது” என அவர் கூறினார்.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக