திமுகவிடம் அரசியல் நாகரீகமில்லை என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
வரும்
ஜூன் 3ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாள் மற்றும் சட்டமன்ற
வைரவிழா சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,
நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட இந்தியா முழுவதிலுமிருந்து
பல்வேறு முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இதற்கிடையே கருணாநிதியின் வைரவிழாவிற்கு மதவாத சக்தியான
மேலும் திமுக தலைவர் கருணாநிதி இந்தியாவிலேயே மூத்த அரசியல்வாதி, இதையெல்லாம் தாண்டி அரசியலுக்கு அப்பாற்பட்டு இலக்கியவாதி,அவர் சட்டமன்ற உறுப்பினராகி வைர விழா காண்கிறார். அவரது விழாவை ஒரு குறுகிய வட்டத்துக்குள் சுருக்கி விடக்கூடாது. திமுகவுடன் எங்களுக்கு உறவு தேவையில்லை. எங்களை அழையுங்கள் என்று நாங்கள் கேட்க்கவில்லை, எதிர்பார்க்க்கவுமில்லை. ஆனால் பொதுவாழ்க்கையில் இந்தியா முழுவதும் நட்பை வைத்திருக்கும் ஒருவரை குறுகிய வட்டத்துக்குள் சுருக்கக் கூடாது. கருணாநிதி இருந்திருந்தால் தமிழக அரசியலை நாகரிகமாக நடத்தி இருப்பார்.
பாஜகவை அழைக்க மாட்டோம் என்றும் அதேபோல தமிழகத்தின் மதவாத கட்சியான அதிமுகவையும் அழைக்க மாட்டோம் என்றும் திமுக செய்தித் தொடர்பாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில், மே 10ஆம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில்,' தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.எனவே தமிழக அரசு தண்ணீர் பற்றாக்குறை பிரச்னையில் உடனடியாக கவனம் செலுத்தி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். வருமான வரித்துறையினரால் கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டியுடன் தொடர்புடைவர்கள் பட்டியலை தமிழக அரசு உடனடியாக வெளியிட்டு, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாஜகவை மதவாத கட்சி என்று திமுகவினர் அவதூறு பரப்பி வருகிறார்கள். பாஜக மதவாத கட்சி என்றால் வாஜ்பாய் தலைமையிலான அரசில் ஏன் திமுக கூட்டணி வைத்தது. தமிழகத்தில் அரசியல் நாகரிகம் வளர்ந்தது என்று நினைத்தோம், ஆனால் அது தவறாக உள்ளது. திமுகவும், ஸ்டாலினும் அரசியல் நாகரீகமற்றவர்களாக உள்ளனர்.கருணாநிதியை வைத்து ஒரு குறுகிய அரசியலை செய்கின்றனர்' என்று தெரிவித்தார். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக