சிக்கலில் சிண்டெல்!வேகமாக
வளர்ந்து வரும் ஐ.டி நிறுவனங்களில் முதன்மையானது, அமெரிக்காவைத்
தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிண்டெல். சென்னையைத் தாண்டி இரண்டாம்
நிலை நகரங்களிலும் தங்கள் அலுவலகங்களை அமைக்க அது 2013-ம் ஆண்டு
முடிவெடுத்தது. திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிறப்புப் பொருளாதார
மண்டலத்தில் 100 ஏக்கர் நிலத்தையும் வாங்கியது. சுமார் 26,000 கோடி ரூபாய்
முதலீட்டில் மிகப் பெரிய ஐ.டி பார்க் நிறுவத் திட்டமிட்ட சிண்டெல்,
முதல்கட்டமாக 2,500 பேர் வேலை செய்ய வசதியாக 2.5 லட்சம் சதுர அடியில் ஒரு
கட்டடத்தை இரண்டே ஆண்டுகளில் கட்டி முடித்தது. கட்டி முடித்து இரண்டு
ஆண்டுகள் முழுமையடைந்துவிட்ட நிலையில், இன்னும் இது செயல்பட
ஆரம்பிக்கவில்லை. காரணம், தமிழக அரசின் நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் (DTCP)
ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை. இந்தக் கட்டடம் சிறப்புப் பொருளாதார
மண்டலத்தில் அமைந்திருப்பதால், எல்லா ஒப்புதல்களும் விண்ணப்பிக்கப்பட்ட அதே
வேகத்தில் ஒற்றைச் சாளர முறைப்படி வழங்கப்பட வேண்டும். ஆனாலும், இது
நடக்கவில்லை. காரணம் வேறென்ன? பாழாய்ப்போன கமிஷன்தான். சிண்டெல்
நிறுவனத்தின் கொள்கைப்படி, சட்டவிரோதமாகப் பணம் கொடுக்க முடியாது. அதனால்
சிக்கலில் நிற்கிறது அந்த நிறுவனம். vikatan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக