உச்சநீதிமன்ற நீதிபதிகள்
8 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கொல்கத்த ஊயர்நீதிமன்ற
நீதிபதி கர்ணன் உத்தரவிட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொல்கத்தா:
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்பட உச்சநீதிமன்ற நீதிபதிகள் 8 பேருக்கு 5
ஆண்டுகள் கடுமையான சிறை தண்டனை விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி
கர்ணன் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை வன்கொடுமைச் தடுப்புச் சட்டத்தின்
கீழ் பிறப்பித்துள்ளதாகவும் நீதிபதி கர்ணன் அதிரடி தீர்ப்பு
வழங்கியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த சி.எஸ். கர்ணன் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ளார். இவர், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷன் கவுல் உள்ளிட்ட பல நீதிபதிகள் மீது ஊழல் புகார் கூறியதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறது. நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார் கூறியதற்காக உச்சநீதிமன்றத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உள்ளாகிய நீதிபதி கர்ணனுக்கு மனநல பரிசோதனை செய்ய சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. இதற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். இதற்கு பதிலடி நடவடிக்கையாக அவர் ஒரு உத்தரவை பிறப்பித்தார்.
அதில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 7 பேருக்குத்தான் மன நல பரிசோதனை செய்ய வேண்டும். எய்ம்ஸ் மன நல மருத்துவர்கள் கொண்ட குழு இந்த சோதனை நடத்த வேண்டும். என அந்த உத்தரவில் கூறியுள்ளார். மேலும் இந்த உத்தரவை வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பிறப்பிக்கிறேன் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்பட உச்சநீதிமன்ற நீதிபதிகள் 8 பேருக்கு 5 ஆண்டுகள் கடுமையான சிறை தண்டனை விதித்து கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை வன்கொடுமைச் தடுப்புச் சட்டத்தின் கீழ் பிறப்பித்துள்ளதாகவும் நீதிபதி கர்ணன் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார். tamiloneindia

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக