காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி உணவு ஒவ்வாமை காரணமாக டெல்லியிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் சோனியா காந்தி கடந்த சில மாதங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கும் சென்று திரும்பினார்.
இந்த சூழ்நிலையில், கடந்த 7ஆம் தேதி உணவு ஒவ்வாமை காரணமாக டெல்லியிலுள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,' உள்நோயாளியாக அனுமதிக்கபட்ட சோனியா காந்தியின் உடல்நிலை சீராக உள்ளாதால் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தியை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்.
மருத்துவமனையில் சோனியா காந்தியை அவரது மகன் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் உடனிருந்து கவனித்து வருகின்றனர்.மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக