புதன், 10 மே, 2017

தமிழன் சித்திரா பவுர்ணமியில் நோக்க‌ வேண்டியது கண்ணகி ஆலயமே தவிர கூத்தாண்டவர் அல்ல‌

Stanley Rajan : சித்திரை மாத முழுநிலவன்று தமிழக கேரள எல்லையிலுள்ள தமிழக கண்ணகி கோயிலில் தமிழக பக்தர்கள் கூடுவது வழக்கம். இன்னும் சாலை வசதி தமிழக அரசால் ஏற்படுதபட்டதா என்றால் இல்லை? கேரளா வழியாக தான் வாகனத்தில் வரமுடியும், கோயில் இடம் எங்களுக்கு என்ற கேரள சர்ச்சையும் உண்டு, தமிழர் இடம்தான் ஆனால் கேரள ஆதிக்கம்.
கண்ணகி விண்ணகம் சென்ற இடமான இந்த வரலாற்று சிறப்புமிக்க இடத்திற்கு, தமிழகம் வழியாக செல்ல வேண்டும் என்றால் பக்தர்களுக்கு ஆபத்தான நடைபயணம். கோயிலும் அழிந்த நிலையில் உள்ளது.


பூம்புகார் கடற்கரையில் சில கட்டங்களை கண்ட கலைஞருக்கு, மெரினாவில் சிலம்போடு சிலை வைத்த கலைஞருக்கு கண்ணகி கோயில் எப்படி மறந்தது என்றால்? ஆச்சரியம்தான்
சோனியாகாந்தியினை மணிமேகலை என்றவருக்கு , அந்த அளவிற்கு சிலப்பதிகாரத்தோடு ஒன்றியவருக்கு ஏன் அந்த கோவில் மறந்தது, மர்மம்தான்
சிலம்பு செல்வர் ம.பொ.சி சென்னை திருத்தணி மீட்டவர், அவரும் கண்ணகி கோவிலை மறந்துதான் இருந்திருக்கின்றார்
எம்ஜிஆருக்கு கண்ணகி மேல் மரியாதை வராமல் போனதில் ஆச்சரியமில்லை, அவரது ரசனை வேறுமாதிரியானது. ஜாணகி முன்னாள் கணவரான கணபதியினை கொடியவன் கோவலன் வடிவில் கண்ட பாண்டியன் அவர்.
தன் முதல்மனைவிக்கு கேரளாவில் கல்லறை கட்டி வழிபட்ட எம்ஜிஆருக்கு இந்த கோவில் தெரியாமல் போனதில் வியப்பில்லை, அவர் அப்படித்தான்
ஜெயலலிதா கேட்கவே வேண்டாம், சிலையினையே தூக்கியவர், இந்த கோயிலை விட்டுவைத்ததே அபூர்வம்.
அவர்கள்தான் அந்நிய வம்சம் என்பார்கள், ஆனால் தமிழ்பரம்பரை கண்டுபிடித்த, தமிழினை வாழ வைக்க வந்ததாக சொல்லும் சீமான் கும்பலுக்கு இப்படி ஒரு இடம் இருப்பதாகவே தெரியாது, கண்ணகியும் தெரியாது, வரலாறும் தெரியாது. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் முருகன்,வீரப்பன்,பிரபாகரன்.
ராமதாஸ் கும்பலுக்கு சித்ராபவுர்ணமி என்றால் மாமல்லபுரம் மாநாடு, அறிக்கை, முதல்வர் கனவு இன்னபிற‌
வைகோ யாழ்பாணத்திற்கும், பாஞ்சாலங்குறிச்சிக்கும் பாய்ந்த பாய்ச்சலில் இந்த கண்ணகி கோவில் நினைவுக்கு வராமலே போய்விட்டது
கீழடியில் பொங்குபவர்களுக்கும் கண்ணகி கோவில் மறந்தே விட்டது
மொத்தத்தில் கண்ணகி விண்ணகம் சென்ற பெரும் வரலாற்று நிகழ்வான சித்திரா பவுர்ணமி தினத்தினை மறைத்து, அந்த பெருமையினை மறைத்து அந்த தின கூத்தாண்டவர் கோயில் கொண்டாட்டத்தை பெரிது படுத்தியது ஊடகங்கள் என்றால், கண்ணகி கோயிலை மறந்தது மொத்தமாக எல்லோரும்.
அப்படி மறந்துவிட்டுத்தான் கண்ணகி, காவேரி, சோழன், பாண்டியன் , தமிழன் என சொல்லிகொண்டிருக்கின்றார்கள், அது கூத்தாண்டவர் கோவில் ஒப்பாரிக்கு ஒப்பானது
தமிழன் சித்திரா பவுர்ணமியில் நோக்க‌ வேண்டியது கண்ணகி ஆலயமே தவிர கூத்தாண்டவர் கோவில் அல்ல‌<

கருத்துகள் இல்லை: