எஸ்.எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவான பாகுபலி2 திரைப்படம் வெளியாகி ஒன்பது தினங்களில் 1000 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்காரணமாக 1000 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையையும் பாகுபலி 2 பெற்றுள்ளது.
திரைப்பட துறையை சேர்ந்த ரமேஷ் பாலா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ளார். அதில், ''பாகுபலி 2 திரைப்படம் இந்தியளவில் 800 கோடி ரூபாயும், வெளிநாட்டில் 200 கோடி ரூபாயும் வசூல் செய்து 1,000 கோடி ரூபாயை வசூல் செய்த முதல் இந்திய திரைப்படம்'' என்று கூறியுள்ளார்.
இந்தி பாகுபலி 2 வசூல் குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள திரைப்பட விமர்சகரான தரன் ஆதர்ஷ், ''படம் வெளியாகி இரண்டாம் வார இறுதியில் 300 கோடி ரூபாய் வசூலை பாகுபலி தாண்டியிருக்கும் '' என்று கூறியிருந்தார். ஆஸ்திரேலியா மற்றும் வட அமெரிக்காவிலும் பாகுபலி 2 திரைப்படம் வசூலை வாரி குவித்துள்ளதாக தரன் ஆதர்ஷ் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். BBC.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக