Arun Mo : கம்மாட்டிப்பாடம்-இன்னொரு தமிழ்ப்படம்
தமிழ்ப் படங்களை பார்த்து,
அல்லது தமிழ் சமூகத்தை பார்த்து சீரழியும் சினிமாவாக மலையாள சினிமா
மாறிக்கொண்டிருக்கிறது. அவ்வப்போது சில உருப்படியான முயற்சி தோன்றினாலும்
அவற்றை விட, தமிழ்ப் படங்கள் மாதிரியே இருக்கும் மலையாள படங்கள்தான் அதிகம்
வரவேற்பை பெறுகிறது. பிரேமம் அதற்கு சரியான உதாரணம். இன்னொரு உதாரணம்
கம்மாட்டிப்படம். சமீபத்தில்தான் கம்மாட்டிப்படம் பார்க்க நேர்ந்தது.
பாதியில் நிறுத்திவிட்டேன். பாகிரதியின் மதியம் படித்து, புத்தகம்
படிப்பதில் தொய்வு ஏற்பட்டது போல இந்த
படம் பார்த்து அடுத்து படம் பார்க்கும் மனநிலை மாறிவிடும் என்பதால்
பாதியில் நிறுத்தினேன். ஆனாலும் ஒரு படத்தை பாதியில் நிறுத்த கூடாது என்று
முழுவதும் பார்த்தேன். மலையாள படங்களை பார்த்து நொந்துக்கொள்கிறேன்.
தமிழ்ப் படங்களை பார்த்து அவர்கள் கெட்டது போல், நல்ல மலையாள படங்களை
பார்த்து நம்முடைய ஆட்கள் ஏன் இன்னமும் மாறாமல் இருக்கிறார்கள் என்று
யோசித்துக்கொண்டிருக்கிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக