சனி, 6 மே, 2017

விரைவில் தமிழக பொதுத்தேர்தல்? ... சாதி, மதவாத கட்சிகள் முழு வீச்சுடன் களத்தில்!


தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறும் கூத்துகளைப் பார்க்கும் போது விரைவில் பொதுத் தேர்தல் நடைபெறலாம் என்றே கூறப்படுகிறது.
By: Lakshmi Priya சென்னை: தமிழகத்தில் விரைவில் பொதுத் தேர்தல் நடைபெறும் என்று மூத்த தலைவர்கள் அடித்து சொல்வது சாத்தியப்படுமா என்பது பற்றிதான் ஊரெல்லாம் பேச்சாக உள்ளது. ஜெயலலிதா உயிரிழந்து விட்டதும், அதிமுகவை சசிகலா கபளீகரம் செய்தது போல்
ஆட்சியையும் கைப்பற்றுவிடுவர் என்று பேச்சு பரவலாக இருந்தது. எனினும் அதற்கு முத்தாய்ப்பாக சசிகலாவும் பதவிக்காக எத்தனை சாணக்கியத்தனத்தை செய்தார் என்பதை இந்த நாடே அறியும். மேலும் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓபிஎஸ்ஸின் செயல்பாடுகளில் ஓரளவு திருப்தி அடைந்த பிரதான எதிர்க்கட்சியான திமுக,
சட்டசபையில் அதிமுகவுக்கு ஆதரவாக இருந்தது. இந்நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியாவதற்குள் ஒருநாளாவது முதல்வராக இருந்துவிட்டால் நமது பெயரை சரித்திரம் சொல்லும் என்று தப்புக் கணக்கு போட்டார் சசிகலா. இதற்கு எதிர்க்கட்சிகள், ஏன் ஆளுங்கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஜெ.சமாதியில் பன்னீர் செல்வம் சசிகலாவுக்கு எதிராக எரிமலையாக வெடித்தார்.


 இப்படி கடந்த சில மாதங்களுக்குள் தமிழக அரசியலில் என்னவெல்லாமோ நடந்துவிட்டது. முதல்வர் பதவிக்கு சசிகலா வீட்டில் இருக்கும் நண்டு, சுண்டுகள் தினகரன், திவாகரன், விவேக் ஜெயராமன் என அனைவரும் முட்டி மோதுகின்ன்றனர். எனினும் சசிகலாவும், தினகரனும் வெவ்வேறு வழக்குகளில் சிறை சென்றுவிட்டனர். விவேக் ஜெயராமன் மீதோ ஜாஸ் சினிமாஸ் ஊழல் வழக்கு காத்திருக்கிறது. இந்நிலையில் தமிழக மக்களுக்கு அறிமுகமே இல்லாத டாக்டர் வெங்கடேஷை தலைமை ஏற்க வருமாறு அவரது ஆதரவாளர்கள் அழைக்கின்றனர். இந்நிலையில் அதிமுக இணைப்பு குறித்து பேசப்பட்டது. எனினும் அது நடக்கவில்லை. மாறாக எடப்பாடி அரசு முடங்கி போய் விட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழிசை சௌந்தரராஜன், மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 3 மூவரும் இனி தமிழக மக்கள் சந்திக்கவிருப்பது ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் அல்ல. பொதுத் தேர்தல் என்று அடித்து சொல்கின்றனர். இதை லேசாக எடுத்துக் கொள்ள முடியாது. அதிமுக பாஜகவின் பிடியில் உள்ளதாக கூறப்படும் நிலையில் தமிழிசையின் கருத்தை அசட்டை செய்ய முடியாது. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்கு இரு அணிகளும் அடித்துக் கொண்ட போது தேர்தல் ஆணையம் இரட்டை இலையை முடக்கும் என்று தமிழிசை கூறியது பலித்தது. அதேபோல் பணப்பட்டுவாடா புகார் எழுந்ததால் ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கோரினார் அதுவும் நடந்தது. மேலும்

தற்போது தமிழகத்தில் ஸ்திரமற்றத்தன்மை நிலவி வருவதால் பொதுத் தேர்தல் நடைபெறும் என்று கூறுகிறார். அதுவும் ஏன் நிஜமாகக் கூடாது? அப்படி எனில் என்ன நடக்கும்? அதிமுக அம்மா அணியில் உள்ள எம்எல்ஏ-க்கள் தனித்தனி கூட்டங்களை கூட்டுவதால் அக்கட்சி பல அணிகளாக உடைய நேரிடலாம். இல்லையெனில், பெரும்பான்மை பலத்தை எடப்பாடி அரசு இழக்கவும் நேரிலாம். இதில் பாஜக எதை நிகழ்த்த அனுமதிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை: