ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில்
பொது வேட்பாளராக மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தியை நிறுத்த
ஆலோசனை நடைபெற்று வருகிறது.
தற்போதைய இந்தியாவின் ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக கோபாலகிருஷ்ண காந்தியை நிறுத்த ஆலோசனை நடந்து வருகிறது. மகாத்மா காந்தி மற்றும் மூதறிஞர் ராஜாஜியின் பேரனான இவர் ஐ.ஏ.எஸ். படித்து 1968 ஆம் ஆண்டு முதல் 1985 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் பணிபுரிந்துள்ளார். அதன் பிறகு துணை ஜனாதிபதியின் செயலாளராகவும், ஜனாதிபதியின் இணை செயலாளராகவும் பணியாற்றினார்.
தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நார்வே, ஐஸ்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் கவர்னராக பணிபுரிந்துள்ளார். 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி மேற்கு வங்காள மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். 2011 ஆம் ஆண்டு சென்னை கலாசேத்ரா பவுண்டேசன் சேர்மனாக நியமிக்கப்பட்டு 2014 ஆம் ஆண்டு மே மாதம் வரை அந்த பொறுப்பில் இருந்தார்.மின்னம்பலம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக