வியாழன், 4 மே, 2017

ஆட்சி அமைக்க ஒரு குடுமி தயார்? வன்னியர், கவுண்டர், தேவர், நாடார், யாதவ ... சாதிவெறி உபயம் பாஜக ...

meena.somu. அதிமுகவை உடைத்தாகிவிட்டது.
ஜாதி ரீதியில் ஆங்காங்கே ஜாதிவெறி (வன்னியர், கவுண்டர், தேவர், நாடார், யாதவ பேரவை... ) அமைப்புகளின் பலத்தை பெற்றாகி விட்டது.
கம்யூனிஸ்டுகளின் பலம் பல்வேறு பிரிவுகளாக ஏற்கனவே சிதறிக் கிடப்பதும், அவர்களுக்குள்ளும் தலித்திய மோதலை விதைத்தாகிவிட்டது.
திமுகவிற்கு ஏற்கனவே என்ன உள்குத்து வைத்திருக்காங்களோ வெளிப்படையா பிஜேபிக்கு எதிரான பலமான எதிர்ப்பே காட்டுறதில்லை.
விசிகவின் திருமாவளவனுக்கு பெருகும் தலித் ஒருமித்த ஆதரவு மற்றும் பொது அரசியலில் உருவாகும் இமேஜை தலித் மக்களை சிதறடிக்கும் யுக்தியை பயன்படுத்தும் விதமாக வழக்கம் போல இதோ கிருஷ்ணசாமி போன்ற ஆட்களை தூண்டி ஆசை காட்டியாச்சு. பள்ளர்கள் சமூக நீதிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் தந்திரத்தை உபயோகப்படுத்தியாச்சு.
ஏற்கனவே ஆங்காங்கே... நடத்திவரும் குத்துவிளக்கு பூஜை முதல்... சாமியை காட்டி சுரணையற்ற பக்த கோடிகளை உருவாக்கியாச்சு.

வேறென்னப்பா... அடுத்து ஆட்சி அமைக்கவும் ஆதிநாத் போல ஒரு குடுமியை ரெடி பண்ணி ஆட்சி கட்டிலில் நேரடியாகவோ மறைமுகமாகவோ அதிகாரத்தை கைப்பற்ற வேண்டியது தான்.

பசுக்களுக்கு வாழ்க்கையை மேம்படுத்த எத்தனை பார்ப்பனரல்லாத மனித உயிர்களை பலிகொடுத்தாவது... பார்ப்பனியத்தை தமிழகத்தில் நிறுவ வேண்டியது தான்.
இது பெரியார் மண்... முற்போக்காளர் சக்தி...
அட... போங்கடா வெண்ணைகளா....
முகநூல் விட்டு வெளிய வந்து பாருங்கடா....அவனவன் ஜாதியமைப்பு அழியக்கூடாது என்பதற்காகவும் ஜாதியபமைப்பில் மேலே ஏறவும் எங்களுக்கு ஆதரவளிக்க ரெடியா இருக்காங்க. இதெல்லாம் 2000 வருட பார்முலா. கண்டிப்பா ஒர்க் அவுட் ஆகும்.
பிஜேபியின் (காவிகளின்) நம்பிக்கை.
ரோட்டில் சாக்கடை ஓடுது, போதிய கட்டமைப்பு இல்லை, நீர்நிலைகள் ப்ளாட்டுகளாகிவிட்டன. தொழிலாளர்களுக்கு போதிய வருமானம் இல்லை, சுரண்டப்படுறாங்க. விவசாயம் அழியுது. மாசு பெருகிட்டு. லஞ்சம் மிதமிஞ்சி போச்சு, ஜாதிஅமைப்பு ஜாதி வெறியோடு அப்படியே இருக்கு, மனுசனை மனுசன் இழிவு படுத்தறான், வன்கொடுமைகள் நடக்குது. பெண்களுக்கு அவர்களுக்கான துணையை தேர்ந்தெடுக்க உரிமையில்லை, அவளுக்கான வெளி மறுக்கப்படுது. சமத்துவமில்லை. இதெல்லாம் சமூக பிரச்சனைகள்.
மதத்தையும் ஜாதியையும் காப்பாற்றுவது தான் அரசோட வேலை. அத காப்பாற்றிட்டா இந்தியா வல்லரசாகிடும்.
நாம சண்டை போடலாம் வாங்க. மார்க்ஸியம் தான் எதிர்காலம், அம்பேத்கர தூக்கி கடாசு.
பௌத்தம் போதும், ஜாதி ஒழிப்பு நம்ம வேலையில்லை. இப்படியே மெயிண்டைன் பண்ணுங்க... ஒருத்தனுக்கும் மார்க்ஸியமும் அம்பேத்கரியமும் பெரியாரியமும் புரிய கூடாது. நம்ம சண்டைய பார்த்துட்டு... அவனவன் ஜெயமோகன் இலக்கியம் படிச்சுட்டு உலறல கேட்டுட்டு, கிரிக்கெட் பார்த்துட்டு, தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த சமூக சிந்தனையும் யோசிக்காம... யாராவது பண்பாடு காக்க மெரினா போலாம் என்றாலோ, பக்கத்தில் பசியோடு இருக்கும் ஆசரமத்தில் சிறு உதவிகள் செய்து, மரம் வளர்த்து சமூக கடமையாற்றிய நிம்மதியோடு போய் சேரலாம்.  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை: