சென்னை,
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர். இதில் ரூ.89 கோடி பணப்பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கி உள்ளன.
இது தொடர்பாக விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவுக்கும், தற்போது வருமான வரி துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரிதுறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை ஏற்று ரம்யா நேற்று வருமான வரி அலுவலகத்தில் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் அவர் விசாரணைக்காக ஆஜராகவில்லை.
இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் விஜயபாஸ்கரின் மனைவி ரம்யா இன்று வருமான வரி அதிகாரிகள் முன்பு ஆஜரானார்.
அவரிடம் கடந்த மாதம் நடந்த சோதனையின் அடிப்படையில் பல்வேறு கேள்வி களை கேட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் அமைச்சர் விஜய பாஸ்கர் மனைவி ரம்யாவிடம் 8 மணி நேரம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்ததை தொடர்ந்து உரிய ஆவணங்களுடன் மீண்டும் ஆஜராக ரம்யாவுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். கட்டுமான நிறுவனம் தொடங்க முதலீடு எங்கு இருந்து வந்தது? என விசாரணை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக