தமிழக
காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் திங்கள்கிழமை (இன்று)
வேதாரண்யம் சென்று அங்குள்ள உப்பு சத்தியாக்கிரக நினைவு ஸ்தூபிக்கு அஞ்சலி
செலுத்திவிட்டு உப்பு அள்ளும் போராட்டத்தில் பங்கேற்றார்.
பின்னர்,
தஞ்சை வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசை மாவட்டத் தலைவர் மற்றும்
நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர், காங்கிரஸ் பிரமுகர் ஒருவரின்
இல்ல காதணி விழாவில் கலந்து கொண்டார்.
அப்போது சசிகலாவின் அண்ணன்
மகன் மகாதேவனின் படத்திறப்பு நிகழ்ச்சியும் நடந்தது. நிகழ்ச்சி முடிந்த
பிறகு மதியம் 1 மணியளவில் திருநாவுக்கரசர் அங்கு சென்று மகாதேவனின்
உறவினர்களுடன் சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்தார்.
அந்தப்
பகுதியில்தான் சசிகலாவின் வீடும் உள்ளது. எனவே, அவரது வீட்டுக்கும்
திருநாவுக்கரசர் சென்றார். அங்கு நடராஜனை சந்தித்துப் பேசினார். இருவரும்
அரை மணி நேரத்துக்கும் மேலாக பேசிக் கொண்டிருந்தனர். அதன்பின்னர்,
திருநாவுக்கரசர் அங்கிருந்து புதுக்கோட்டைக்கு புறப்பட்டுச் சென்றார்.
இப்போதைய அரசியல் சூழ்நிலையில் திருநாவுக்கரசர் - நடராஜன் திடீர் சந்திப்பு
அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக