புதன், 3 மே, 2017

சவுதியில் இருந்து நாடு திரும்பும் 20 ஆயிரம் இந்தியர்கள்


புதுடில்லி: சவுதி அரசின் பொது மன்னிப்பு திட்டம் மூலம் 20 ஆயிரம் இந்தியர்கள் நாடு திரும்ப விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. தமிழர்கள்: இது தொடர்பாக தூதரக அதிகாரி ஒருவர் கூறுகையில், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மற்றும் விசா காலம் முடிந்து தங்கியுள்ளவர்களுக்காக சவுதி அரசு பொது மன்னிப்பு திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின்படி கடந்த திங்கட்கிழமை(1ம் தேதி) வரை 20,321 இந்தியர்கள் தாயகம் திரும்ப விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களில் தமிழகத்தை சேர்ந்த 1,500 தொழிலாளர்களும் விண்ணப்பம் செய்துள்ளனர். இதனையடுத்து உ.பி., மற்றும் பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
தொழிலாளர்கள்: திரும்ப விரும்புபவர்களுக்காக சவுதி அரசு சிறப்பு அலுவலகங்கள் அமைத்துள்ளது. சட்டவிரோதமாக இங்கு தங்கியுள்ள இந்தியர்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தூதரகம் கேட்டு கொண்டுள்ளது. இதனை ஏற்று விண்ணப்பம் செய்தவர்கள் பெரும்பாலானோர் தொழிலாளர்களாக உள்ளனர். இவர்களுக்கு இந்திய தூரதக அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் உதவி செய்வார்கள். இதற்காக தூதரக அலுவலகத்தில் சிறப்பு அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விசா கட்டணம் செலுத்த தேவையில்லை. ஆனால், விமான பயணத்திற்கான கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.maalaimalar

கருத்துகள் இல்லை: