சனி, 6 மே, 2017

கலைஞர் 94 வது பிறந்தந்த நாள்விழா..சோனியா காந்தி , நிதிஷ்குமார் ,லாலு பிரசாத் உட்பட ஏழு மாநிலங்களின் முதல்வர்கள்.வருகிறார்கள்! கனிமொழி நேரில் அழைப்பு!

DMK MP Kanimozhi inviting Lalu prasad yadav for DMK Leader Karunanidhi's birth day திமுக தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்த நாள் விழாவிற்காக லாலு பிரசாத் யாதவுக்கு அக்கட்சியின் எம்பி கனிமொழி நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தார்.
By: Kalai Mathi  :டெல்லி: திமுக தலைவர் கருணாநிதியின் 94வது பிறந்த நாள் வரும் ஜூன் 3ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த விழாவிற்காக லாலு பிரசாத் யாதவுக்கு அக்கட்சியின் எம்பி கனிமொழி நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்தார். திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளுடன் வைர விழாவை பிரமாண்டமாக கொண்டாட திமுக முடிவு செய்துள்ளது. இதில் பீகார், மேற்குவங்கம் உள்ளிட்ட 7 மாநில முதல்வர்கள் இந்த விழாவில் பங்கேற்பார்கள் என அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.


திமுக தலைவர் கருணாநிதி சட்டசபையில் அடி வைத்து இந்த ஆண்டுடன் அறுபது ஆண்டுகள் நிறைவடைகிறது. கருணாநிதியின் வைரவிழாவை மிகப் பிரமாண்டமாகக் கொண்டாட தி.மு.க முடிவு செய்துள்ளது. சென்னையில் நடைபெறவிருக்கும் வைரவிழா நிகழ்ச்சியில் ஏழு மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். பஞ்சாப், மேற்கு வங்கம், பீஹார், கர்நாடகா, ஆந்திரா, கேரள மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி முதல்வர்கள் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது. அதன்படி பிற மாநில முதல்வர்களை சந்தித்து அழைப்பிதழ் கொடுக்கும் பணியினை திமுகவினர் தொடங்கியுள்ளனர். இன்று திமுக எம்பி கனிமொழி லாலு பிரசாத் யாதவை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினார். tamiloneindia

கருத்துகள் இல்லை: