சாரு நேற்று ஒரு விஷயத்தை தெளிவாக எடுத்து சொன்னார் .
"ஒருத்தன் செஸ் விளையாட்டுல வல்லவன்னா அவனை அதுல தோற்கடி ,அது தான் சாமர்த்தியம் ,அத விட்டுட்டு செஸ் போர்டு அ தூக்கி போட்டு உடைக்காத "
ஒரு எழுத்தாளரின் எழுத்துக்களை விமர்சிக்கின்ற உரிமை வாசகர்களுக்கு முழுவதாய் இருக்கிறது .ஒரு எழுத்தாளனாக இன்னொரு எழுத்தாளனை தோற்கடிக்க விமர்சனம் என்கின்ற ஒரு விஷயத்தை மட்டுமே விஷயத்தை கையிலெடுப்பது பலவீனத்தை குறிக்கிறது .ஒரு எழுத்தாளனை தோற்கடிக்க நீ அவனை விட நன்றாக எழுத வேண்டும் , அவர்கள் பயணித்த தூரம் வரையிலாவது பயணிக்க வேண்டும் இல்லை அதை விஞ்ச வேண்டும். வருங்காலத்தில் என் சக எழுத்தாளர்களோடு எனக்கு பிணக்கு வருமாயின் நான் அவர்களோடு இலக்கிய வடிவத்தில்தான் மோத முற்படுவேன் .அதுவே நீதி .என் போர் ஆயுதம் மட்டுமே நான் எப்பேர்ப்பட்ட வீரன் என்பதை தீர்மானிக்கிறது .

அதை விட்டுவிட்டு தனிமனித தாக்குதல்களிலும் ,அந்தரங்க விஷயங்களை சந்திக்கு
கொண்டுவந்து சண்டையிடுவது எப்படிப்பட்ட பாரம்பரியம் என்பது புரியவில்லை .
நான் உண்மையிலேயே திறன் மிக்கவளாக இருந்தால் ஒரு எழுத்தாளருடைய எழுத்துக்களில் ஆயிரம் குற்றங்களை கண்டுபிடித்து சண்டை போட வேண்டும் அதை விட்டு விட்டு அந்த எழுத்தாளனுக்கு எத்தனை காதலிகள் ,அவர் யாரோடு "Wet chat " செய்தார் என்று புலம்புவது நான் பலகீனமானவள் என்பதை குறிக்கும் .
இன்னொரு விஷயத்தையும் சாரு குறிப்பிட்டார் " உங்களுக்கு எழுத்தாளர்கள் அல்ல ,மாகாத்மாக்கள் தான் தேவை என்று ".
என்னுடைய நட்பு வட்டாரத்தில் இன்னும் கூட பல பேர் சாரு ,மனுஷ்யபுத்திரனை படிக்காமல் இருக்கிறார்கள் .ஏன் இன்னும் படிக்கவில்லை என்று கேட்டால் " அவர்கள் சரி இல்லை என்று ஒரு பேச்சு இருக்கிறது ,குடிகாரர்கள் ,ஸ்த்ரீலோலர்கள் ...இத்யாதி இத்யாதி ...."
இது எப்பேர்ப்பட்ட மனநோய் தெரியுமா ?
ஒரு படைப்பாளியின் தனிமனித வாழ்க்கையை வைத்து ஒரு படைப்பை புறம்தள்ளுவது வாசகர்களாகிய நாமே நமக்கு செய்து கொள்ளும் துரோகம் .We are depriving ourselves .
ஒரு படைப்பாளி தன் சொந்த வாழ்க்கையில் ஊர் மெச்சும் 'so called ' யோகியனாக இருந்து படைப்புகளில் அடக்குமுறை மனப்பான்மையையும் ,சமூக அநியாயங்களை தூக்கி பிடிப்பவனாக இருந்தால் ஏற்றுக்கொண்டு
,சொந்த வாழ்க்கையில் தன் விருப்பப்படி வாழ்ந்து கொண்டு எழுத்துக்களில் சமூகத்தின் வலியயை பிரதிபலிப்பவனை ஏற்றுக்கொள்ளத சமூகம் நோய் கொண்டதே .
ஷேக்ஸ்பியரில் இருந்து பிக்காஸோ வரை அவர்களின் அந்தரங்கங்களை கருத்தில் கொண்டிருந்தால் நல்ல படைப்புகளை நாம் ரசித்திருக்கவே முடியாது .
படைப்புகளில் பிழை இருந்தால் தவறாமல் விமர்சிப்போம் .படைப்பாளிகளின் படுக்கையறையில் எட்டி பார்ப்பதை நிறுத்திக்கொள்வோம் .
ஷாலின் மரிய லாரன்ஸ் முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக