மாயமான மலேசிய விமானத்தில் இருந்து தரைக்கு வந்த “ஆல் ரைட், குட்நைட்”
என்ற இறுதி சொற்கள் கூறப்படுவதற்கு முன்னரே, விமானத்தில் முதல் செட்
ட்ரான்ஸ்மிஷன் டிவைஸ் செயலிழக்க வைக்கப்பட்டு விட்டது என்பதை,
புலனாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். இது ஒரு பெரிய திருப்பம்தான் என
இன்று காலை எழுதியிருந்தோம்.
“இதை சற்றே விளக்கமாக எழுத வேண்டும். அதே நேரத்தில் டெக்னிகலான இந்த விஷயத்தை அனைவருக்கும் புரியும் விதத்திலும் எழுத வேண்டும். சிறிது நேரம் கொடுங்கள்..” எனவும் குறிப்பிட்டிருந்தோம். இதோ, இந்த விவகாரத்தை எளிமையாக கொடுத்திருக்கிறோம்.
“ஆல் ரைட், குட்நைட்” என்ற இறுதி சொற்கள் கூறப்படுவதற்கு முன்னரே, விமானத்தில் முதல் செட் ட்ரான்ஸ்மிஷன் டிவைஸ் செயலிழக்க வைக்கப்பட்டு விட்டது என்று குறிப்பிடப்படுவது, விமானத்தின் ACARS (Aircraft Communications Addressing and Reporting System) என்பதைதான்.
இது, விமானி, தரையுடன் பேசும் தொடர்பு சாதனம் அல்ல. இந்த ACARS, விமானத்தின் மெயின்டெனன்ஸ் தொடர்பான தரவுகளை தரைக்கு அனுப்பும் சிஸ்டம்.
விமானத்தின் காக்பிட்டில், இரு விமானிகளுக்கும் நடுவே, எதிரேயுள்ள பானலில், அவர்கள் தரையுடன் பேசும் தொடர்பு சாதனத்துக்கான (ரேடியோ) சுவிட்ச் உள்ளது. இதை ஆஃப் செய்துவிட்டால், விமானத்தின் காக்பிட்டில் இருப்பவர்கள் பேசுவது தரைக்கு கேட்காது. தரையில் இருந்து சொல்வது, இவர்களுக்கு கேட்காது.
விமானங்களை இயக்கும் அநேக விமானிகள் இதை ஆன் செய்வதும், ஆஃப் செய்வதுமாக இருப்பார்கள். காரணம், தாம் பேசும் அனைத்து விஷயங்களையும் தரையில் இருப்பவர்கள் தெரிந்து கொள்வதை பலர் விரும்புவதில்லை. (ஆனால், அனைத்து காக்பிட் உரையாடல்களும், விமானத்தில் உள்ள பிளாக் பாக்ஸில் பதிவாகும்)
விமானங்கள் பற்றி துல்லியமாக தெரிந்த ஒருவருக்கு, இந்த ரேடியோ தொடர்பை ஆஃப் பண்ணிவிட்டால், தரையுடன் உள்ள அனைத்து சிக்னல் தொடர்புகளும் துண்டிக்கப்படாது என்பது நன்றாகவே தெரியும்.
ரேடியோ ஆஃப் செய்யப்பட்டாலும், தரைக்கு சிக்னல் அனுப்பிக் கொண்டிருக்கும் மற்றொரு டிவைஸ், நாம் ஏற்கனவே குறிப்பிட்ட ACARS. விமானங்கள் பற்றி துல்லியமாக தெரிந்த ஒருவருக்கு இதுவும் நன்றாக தெரியும். இதனால், கீழே சிக்னல் போகாமல் செய்ய வேண்டுமென்றால், இந்த டிவைஸையும் நிறுத்த வேண்டும்!
இதையும் நிறுத்தி விட்டால், அதன்பின் தரையில் உள்ள சிவிலியன் டவர்களில் உள்ள ராடார்களில் விமானத்தில் இருந்து சிக்னல் ஏதும் வராது. ஆனால், ACARS நிறுத்தப்பட்டாலும், ராணுவ ராடார்கள், மற்றும் கடற்படை கப்பல்களில் உள்ள ராடார்கள், மற்றும் உளவு விமான ராடார்களில் சிக்னல் கிடைக்கும் என்பது வேறு விஷயம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக