சென்னை ஐகோர்ட்டில் சமூக சேவகர் டிராபிக் ராமசாமி ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில், ‘‘இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நிரந்தர தேர்தல் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சிகள் தங்களது சின்னத்தை பொது இடங்களில் நிரந்தரமாக வைக்கின்றனர். அதன் மூலம் சுயேச்சை வேட்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே அரசியல் கட்சிகளுக்கு நிரந்தர சின்னம் ஒதுக்காமல் தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் புதிய சின்னங்கள் ஒதுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடந்த 11 மற்றும் 15–ந்தேதிகளில் கோரிக்கை மனு அனுப்பினேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை’’ என கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ்குமார் அக்னிகோத்ரி, நீதிபதி சுந்தரேஸ் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மனுதாரர் (டிராபிக் ராமசாமி) கோரிக்கை மனுவை இந்திய தேர்தல் கமிஷன் ஆணையத்துக்கு கடந்த வாரம் அனுப்பி விட்டு உடனே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
இவரின் கோரிக்கை மனுவை பரிசீலனை செய்ய தேர்தல் ஆணையத்துக்கு போதிய அவகாசம் கூட வழங்கப்படவில்லை. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று உத்தரவிட்டனர்.maalaimalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக