மதுரை: நானும், எனது ஆதரவாளர்களும், தொண்டர்களும் பனங்காட்டு நரிகள்.
சலசலப்புக்கும், பூச்சாண்டி மிரட்டலுக்கெல்லாம் அஞ்ச மாட்டோம் என்று திமுக
பொதுச் செயலாளர் அன்பழகனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் மு.க.அழகிரி தன்னுடன் பேசக் கூடாது, தொடர்பு கொள்ளக் கூடாது, மீறினால் நடவடிக்கை பாயும்
என்று திமுகவினரை எச்சரித்து நேற்று அன்பழகன் அறிக்கை விட்டிருந்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களை அழைத்துப் பதிலடி கொடுத்தார் அழகிரி. அப்போது
அவர் கூறுகையில்,
என்னுடைய ஆதரவாளர்களும், தொண்டர்களும் பனங்காட்டு நரிக்கூட்டத்தை
சேர்ந்தவர்கள். அவர்கள் யாருக்கும் பயப்பட மாட்டார்கள். பணத்திற்கும்
ஆசைப்படமாட்டார்கள். பாசத்திற்கு கட்டுப்பட்டவர்கள்.
திமுகவில் அங்கம் வகிப்பவர்கள் பதவி ஆசைபிடித்தவர்கள். அவர்கள் தான்
பணத்திற்காக எதுவும் செய்யக்கூடியவர்கள். எனவே அவர்களின்
பூச்சாண்டிக்கெல்லாம் நாங்கள் பயப்படமாட்டோம் என்றார் அழகிரி அதிரடியாக.
tamil.oneindia.in
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக