சென்னை : மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் என்பதால் என்னை ஒதுக்கி
விடாதீர்கள் என லோக்சபா தேர்தலில் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக
அறிவிக்கப்பட்டுள்ள கார்த்திிதம்பரம்ெரிவித்துள்ளார்.வேட்பாளராக
அறிவிக்கப்பட்ட பின்னர் தொண்டர்களிடம் பேசிய அவர் இவ்வாறு
தெரிவித்துள்ளார்.வாரிசு
அரசியல் : இந்திய அரசியலில் மற்றொரு வாரிசு அரசியலின் ஆரம்பமாக மத்திய
நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் லோக்சபா தேர்தலில்
போட்டியிட உள்ளார். காங்கிரஸ் நேற்று (மார்ச் 20) வெளியிட்டுள்ள 4வது
வேட்பாளர் பட்டியலில் சிதம்பரத்திற்கு பதில் அவரது மகன் கார்த்தி
சிதம்பரத்திற்கு சிவகங்கை தொகுதியில் போட்டியிட சீட் வழங்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மற்ற மூத்த தலைவர்களைப் போல் தானும் லோக்சபா தேர்தலில்
போட்டியிடப் போவதில்லை எனவும், தனக்கு பதில் தனது தொகுதியான சிவகங்கையில்
போட்டியிட தனது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் அளிக்க வேண்டும் எனவும்
சிதம்பரம் கேட்டுக் கொண்டதால், காங்கிரஸ் மேலிடம் கார்த்திக்கு சீட்
அளித்துள்ளது.
ஒரு சொந்த சர்டிபிகேட் மாதிரி அல்லவா இருக்கிறது.சிதம்பரம் மகன் என்பதால்
தள்ளி வைக்கப்பட வேண்டியது ஏன் என்பதையும் சொல்லி விட்டால் மிக நன்று. கார்த்தி பேட்டி : நான் சிதம்பரத்தின் மகன் என்பதால் நீங்கள் என்னை தேர்வு செய்ய மாட்டீர்கள்; அதே சமயம், சிதம்பரத்தின் மகன் என்பதால் என்னை ஒதுக்கி விடாதீர்கள்; நான் காங்கிரசிற்காக 1996ம் ஆண்டு முதல் உழைத்து வருகிறேன்; என்னால் முடிந்த அளவிற்கு கட்சிக்காக நான் எனது பங்களிப்பை அளித்து வருகிறேன்; சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் பலமுடன் உள்ளது; தமிழகத்திலேயே காங்கிரசின் பலம் அதிகமுள்ள தொகுதி சிவகங்கை தான்; நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது; கட்சி பணிகளில் கவனம் செலுத்த விரும்புவதால், தேர்தலில் போட்டியிடுவது போதும் என என் அப்பா முடிவு செய்துள்ளார்; அதனாலேயே இந்த தேர்தலில் அவர் போட்டியிடவில்லை. இவ்வாறு கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக முறைப்படி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே சிதம்பரம், சிவகங்கை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரசாரம் செய்து வந்தார். முதலில் கார்த்தி சிதம்பரத்திற்கு சீட் வழங்க முடியாது என சோனியாவும், ராகுலும் திட்டவட்டமாக கூறி விட்டனர். இருந்தும் சிதம்பரத்தின் விடாப்பிடியான வலியுறுத்தலைத் தொடர்ந்து அவருக்கு சீட் வழங்க காங்கிரஸ் மேலிடம் சம்மதம் தெரிவித்துள்ளது. dinamalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக