திங்கள், 17 மார்ச், 2014

அழகிரியின் Politcs ? ஸ்டாலின் கோஷ்டிக்கு வலியோ வலி நிரந்தர வலி !

தி.மு.க.வினரால் பெரிதும்  எதிர்பார்க்கப்பட்ட அழகிரியின் மதுரை மந்திராலோசனையில் இன்று என்ன நடந்தது?  ‘புதுக் கட்சி தொடங்குவார்’, ‘தி.மு.க.வுக்கு எதிராக போர் முரசு ஒலிப்பார்’ என்றெல்லாம்  கடந்த சில தினங்களாக அடிபட்டுக்கொண்டிருந்த பலத்த வதந்திகள் போல எதுவுமே நடக்கவில்லை!
ஆனால், தந்திரமான நகர்வு ஒன்றை மேற்கொண்டிருக்கிறார் என்றே தெரிகிறது. தி.மு.க.வுடன் ‘நேரடி மோலை’விட  தற்போது அழகிரி எடுத்துள்ள ஸ்டான்ட் அவருக்கு பலன் தரக்கூடியது.
ஆதரவாளர் மத்தியில் பேசிய அழகிரி, “தற்போது தி.மு.க., கருணாநிதி கட்டுப்பாட்டில் இல்லை. ஏதோ ஒரு நெருக்கடி அவருக்கு இருந்து வருகிறது. என்ன நெருக்கடி என்று கேட்டால் அவர் சொல்ல மறுக்கிறார். இதனால் கட்சியையும், கருணாநிதியையும் காப்பாற்றுவதே நமது முதல் கடமையாக இருக்க வேண்டும்” என்பதையே தமது பேச்சின் ஹைலைட்டாக கூறினார் என்று தெரிகிறது.
தற்போது தி.மு.க., கருணாநிதி கட்டுப்பாட்டில் இல்லை. ஏதோ ஒரு நெருக்கடி அவருக்கு இருந்து வருகிறது. என்ன நெருக்கடி என்று கேட்டால் அவர் சொல்ல மறுக்கிறார். இதனால் கட்சியையும், கருணாநிதியையும் காப்பாற்றுவதே நமது முதல் கடமையாக இருக்க வேண்டும்.

இன்னும் தொடர்ந்து பல மாவட்ட கட்சியின் அதிருப்தியாளர்களை சந்திக்கவுள்ளேன். அவர்கள் சொல்லும் கருத்துக்கள் குறித்து ஆராயப்படும்” என்பதே அழகிரியின் பேச்சு.
அழகிரியின் அரசியல்,  என்றுமே ‘புரட்சி வீரராக’ வெளிப்பட்டு கட்சிக்கு சவாலாக விஸ்வரூபம் எடுப்பது அல்ல. கட்சியை முறைத்துக் கொள்ளாமல், கருணாநிதியை பகைத்துக் கொள்ளாமல், ஸ்டாலினை குறி வைத்து தாக்கும் பாணி அவருடையது.
தமது அடையாளமே, ‘தி.மு.க.’ என்ற மூன்றெழுத்து என்பதை தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார் அவர்.
கட்சியில் இருந்து விலகிப் போகாமல், கட்சியை ஸ்டாலினை விட்டு விலகி தம்பக்கம் இழுக்க பார்க்கிறார் இவர். அதுதான் அவருக்கு பாதுகாப்பானதும் கூட.
மதுரை ஆலாசனைக் கூட்டத்தில் அவர் எதை எஸ்டாபிளிஷ் பண்ண பார்க்கிறார்?
“கட்சி கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இல்லை. அதனால், தி.மு.க. வேட்பாளர்களும் கருணாநிதியின் சாய்ஸ் இல்லை. இவர்களை தோற்கடித்தால், அது தி.மு.க.வுக்கோ, கருணாநிதிக்கோ எதிரான செயல் அல்ல” என்பதே, அஞ்சாநெஞ்சரின் அஜென்டா!
அண்ணன் அடக்கி வாசிக்கவில்லை, அடித்துதான் விளையாடுகிறார்… சைலன்டாக!
நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி பா.ஜ.க. கூட்டணிக்குமாங்கே பொசியலாம்!
viruvirupu.com

கருத்துகள் இல்லை: