கூடுதல் மைலேஜ், அதிக திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்ட சிறிய பெட்ரோல்
எஞ்சின்களை தயாரிக்கும் பணிகளை மாருதி, ஃபோர்டு நிறுவனங்கள்
தீவிரப்படுத்தியுள்ளன.
அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் அனைத்து கார்
நிறுவனங்களும் முனைப்பு காட்டி வருகின்றன. அந்த வகையில், நவீன
தொழில்நுட்பத்துடன் கார் எஞ்சின்களை மேம்படுத்துவதற்கும் கார் நிறுவனங்கள்
முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.
டீசல் எஞ்சின் தொழில்நுட்பம் வேகமாக மேம்பட்டு வரும் நிலையில், நம் நாட்டு மார்க்கெட்டில் பெட்ரோல் விலை உயர்வு பெட்ரோல் கார் விற்பனையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை கருத்தில்கொண்டு, அதிக மைலேஜ் தரும் புதிய பெட்ரோல் எஞ்சின்களை தயாரிக்க முன்னணி கார் நிறுவனங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.
ஈக்கோபூஸ்ட் என்ற பெயரில் புதிய 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை ஃபோர்டு அறிமுகம் செய்துள்ளது.
யாரும் நினைத்து பாராத வகையில் இருமடங்கு திறனை அதாவது, 125 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது ஈக்கோபூஸ்ட் எஞ்சன் என ஃபோர்டு சர்டிபிகேட் கொடுக்கிறது. 1.6 லிட்டர் எஞ்சின் வெளிப்படுத்தும் அளவுக்கு இந்த எஞ்சின் திறனை வெளிப்படுத்தும் என்பதோடு, கூடுதல் மைலேஜையும் கொடுக்கும்.
இந்த புதிய எஞ்சின் பெட்ரோல் செலவை மிச்சப்படுத்தும் என்பதோடு, பெர்ஃபார்மென்ஸ் விரும்பும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்து விடலாம். மேலும், ஒரே எஞ்சினை பல மாடல்களுக்கு ட்யூனிங் செய்து பொருத்த முடியும் என்பதால் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி செலவீனங்களை வெகுவாக கட்டுப்படுத்த முடியும் என கார் நிறுவனங்கள் கருதுகின்றன.
ஃபோர்டு விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கும் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் இந்த புதிய ஈக்கோபூஸ்ட் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் பொருத்தப்பட்டு விற்பனைக்கு வர இருக்கிறது. மற்ற எஞ்சின்களை ஒப்பிடும்போது குறைந்த கார்பன் புகையை வெளிப்படுத்தும் என்பதால் சுற்றுச் சூழலுக்கும் இந்த எஞ்சின் உகந்ததாக இருக்கும் என்று ஃபோர்டு தெரிவிக்கிறது.
இதேபோன்று, ஏராளமான கார் மாடல்களை வைத்திருக்கும் மாருதி நிறுவனமும் நவீன தொழில்நுட்பத்துடன் புதிய பெட்ரோல் எஞ்சின்களை தயாரிக்க முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. பெட்ரோல் விலை உயர்வை வாடிக்கையாளர்கள் எளிதாக எதிர்கொள்ள ஏதுவாக அதிக மைலேஜ் கொடுக்கும் என்பதால், இந்த எஞ்சின்கள் மார்க்கெட்டில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
இதேபோன்று, நிசான் மற்றும் ரினால்ட் கூட்டணியும் நவீன தொழில்நுட்பம் கொண்ட சிறிய பெட்ரோல் எஞ்சின் தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. எதிர்கால சந்தையில் நவீன தொழில்நுட்பம் கொண்ட சிறிய எஞ்சின்களின் ஆதிக்கம் செலுத்தும் என்று ஆட்டோமொபைல் துறையினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக