எத்தனையோ ஆபாச வீடியோக்கள்.... செல்ஃபோன், டி.வி.டி.கள் இண்டெர்நெட்களில்
உலவிக்கொண்டிருக்கின்றன. இதுபோன்ற ஆபாச காட்சிகளில் ஓ.கே. சொல்லிவிட்டு
ஈடுபடும் பெண்கள் ஒரு ரகம்.
அது பிஸினஸ். பெண்களுக்கே தெரியாமல் ரகசிய கேமரா பொருத்தி அந்தரங்கங்களை படம் பிடிப்பது இன்னொரு ரகம். ஆனால், நண்பர் ஒருவர் காண்பித்த ஆபாச வீடியோக்கள் நம்மை வேதனையுடன் "“உச்'’கொட்ட வைக்கிறது. இன்னமும் பெண்கள் இப்படி இருக்கி றார்களே என்கிற கோபமும் ஆதங்கமும் எரிமலையாய் வெடிக்கிறது.
அவர் காண்பித்த முதல் வீடியோ... அந்த பெண்ணுடன் அந்தரங்கமாய் இருந்துவிட்டு... தனது வக்கிரபுத்தியை கொஞ்சம் கொஞ்சமாக தொடர ஆரம்பிக்கிறது அந்த வாலிபன் கையி லிருந்த செல் ஃபோன். ஆம்... செல்ஃபோனிலுள்ள கேமராவை ஆன் செய்தவன்... அவளின் ஆடையில்லா உடலை படம் பிடிக்க ஆரம்பிக்கிறான். அவள் அதிர்ச்சியாகி.... ""ஏய் என்ன பண்ற நீ?'' என்கிறாள்.
""சும்மாதான்... நீ இல்லாம தனிமையில இருக்கும்போது பார்த்து ரசிக்கத்தான்.''’’
""ப்ளீஸ் வேணாம்...'' என்று முகத்தை மூடிக்கொண்டு கெஞ்சுகிறாள் அந்த பெண். ""இர்ரு.... இர்ரு''’ என்றபடி தனது கடமையில் குறியாய் இருக்கிறான் அவன்.
அவளோ எடுக்க அனுமதிக்க மறுக்கிறாள். ஆனால், ""ஒரு செகண்ட் ப்ளீஸ்.... ஒரு செகண்ட் ப்ளீஸ்'' என்று கெஞ்சியபடி படம் பிடிக்கிறான் அந்த வக்கிரன்.
""ஏய்... என்ன நினைச்ச நீ?''’’
""நாங்கள்லாம் சிவகாசி பரம்பரைடி...''’’
""அய்யோ என்னை படுத்துறியே'' -இப்படி’’ அவளுடைய கெஞ்சல்கள் அந்த வக்கிரனின் காதுகளில் விழவில்லை. தொடர்ந்து தனது சில்மிஷங்களை அரங்கேற்றிய படி... அதை கேமராவால் விழுங்கிக் கொண்டிருக்கிறான். அவளும்... தடுக்க இயலாத நிலையில் இருந்து கொண்டு தவிக்கிறாள்.
""பார்த்துட்டு டெலிட் பண்ணிடணும்... ப்ளீஸ்'' என்று அவள் கெஞ்சும்போது... ஒருவித சோகம்... ஒரு வித பயம் அவள் முகத்தில் தாண்டவமாடுகிறது. ஆனாலும், அவனோ ""சரி... நீ ட்ரெஸ்ஸை போடு அந்த அழகையும் எப்படி இருக்குன்னு பார்க்கிறேன்'' என்று விடாமல் படம்பிடிக்கிறான். மறுபடியும் மறுபடியும் அவள் அந்த காட்சிகளை நீக்கிவிடவேண்டும் என்று கொஞ்சி பார்க்கிறாள்... கெஞ்சி பார்க்கிறாள். ம்ஹூம்... அந்த ஆபாச வீடியோ இப்போது பல இளசுகளின் செல் ஃபோன்களில் வலம் வந்துகொண்டிருக்கிறது. இண்டெர்நெட்டில் யூ டியூப்-லும்... டி.வி.டியாகவும் கூட வந்துவிட்டது என்கிறார் நண்பர்.
அடுத்து இன்னொரு வீடியோ... சேலை கட்டிய இல்லத்தரசியாக இருக்கிறார் அந்த பெண். கழுத்தில் தாலி தொங்குகிறது. “""சீக்கிரம்'' என்று அவளை அவசரப்படுத்துகிறான். திடீரென்று செல்ஃபோன் கேமராவை வைத்து படம்பிடிக்க ஆரம்பித்துவிடுகிறான் இந்த இரண்டாவது வக்கிரன். ""ப்ளீஸ்டா வேணாம்டா... சொன்னா கேளுடா...'' என்று வேதனையோடு கெஞ்சுகிறாள் அவள். ""இனிமே எடுக்க மாட்டேன் இந்த ஒரே தடவைதான். பார்த்துட்டு டெலிட் பண்ணிடுவேன்'' என்கிறான் அவன். ""நீ ஏதோ பண்ணத் தான் எடுக்குற? சொன்னா கேளு'' என்றபடி அந்த செல்ஃபோனை தட்டிவிடுகிறாள். ஆனாலும், ""இதை நான் பார்க்கத்தான், டெலிட் பண்ணிடுறேன்'' என்று சொல்லி கெஞ்சி... கொஞ்சி எடுத்து விடுகிறான். ஆனால், அதுவும் இப்போது எல்லோரது பார்வைக்கும் வந்துவிட்டது. “குடும்ப பெண்களோட அந்தரங்கத்தை எடுத்துப் போட்டு அவங்களோட வாழ்க்கையை சீரழிக்கிறானுங் களே.. அவனுங் களோட முகத்தை பத்திரிகையில போட்டு... எச்சரிக்கைப் படுத்தணும்ங்க'' என்கிறார் நண்பர் கொந்தளிப்போடு. இப்படி சிறுமிகளோடு இருப்பதும், காதலன் காதலி, கணவன் -மனைவியின் அந்தரங்க காட்சி கள் பலவும் அம்பலமாவது எப்படி?
சொல்வதெல்லாம் உண்மை... தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் பல சமூக பிரச்சனைகள் குறித்து பேசி தீர்வுகண்டு வரும் ‘வணக்கம்’ புகழ் நிர்மலா பெரியசாமியிடம் பேசினோம். ""எத்தனையோ பிரச்சனைகளோடு வரும் பெண்களில்... ஆண்களிடம் ஏமாறும் பெண்கள்தான் அதிகமாக என்னை தேடி வருகிறார்கள். சமீபத்தில்... காதல்னா என்னன்னே தெரியாத 14 வயசு பொண்ணு ஒருத்தன்கூட ஓடிப்போயி... ஏமாந்து வந்து நிக்கிது. இருபது வயசு பொண்ணு... நல்லா படிச்சிருக்கு. ஆனா, ஷேர் ஆட்டோ ஓட்டுற ஒருத்தனை மூன்றாம் தரமா கல்யாணம் பண்ணியே தீருவேன்னு ஒத்தக்காலில் நிற்குறா. இப்படி... தான் ஏமாற்றப்பட்டோம்னு தெரிஞ்சும்கூட.. அதை கொஞ்சம்கூட புரிஞ்சுக்காம நடந்துக்குறாங்க சில பொண்ணுங்க.
காதலை தவறா புரிஞ்சுக்கிறதுதான் இதுக்கு காரணம். இப்படிப்பட்ட பெண்கள்தான் வக்கிர ஆண்கள்மீது அதீத நம்பிக்கை வைத்துக்கொண்டு தன் உடலை அந்தரங்க வீடியோ எடுக்க ஒப்புக்கொள்கிறார்கள். அதுவே இப்படி அனைவரையும் பார்க்க வைத்துவிட்டது. சமீபத்துல வந்த "வழக்கு எண் 18/9'-ங்கிற படத்துலக்கூட ஒரு மாணவன்.... இன்னொரு மாணவியை எப்படி அவளுக்கே தெரியாமல் ஆபாசமா படம் எடுத்து நண்பர்களிடம் காண்பித்து கெத்து காண்பிக்கிறான் என்பதைக் காட்சியாக்கி பெண்பிள்ளைகள் வைத்திருக்கும் பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஊட்டியிருக்காரு அந்த படத்தோட இயக்குனர். இதுபோன்ற அந்தரங்க வீடியோக்களில் வரும் பெண்களின் உடலை... அவர்களது குடும்பத்திலுள்ள... அப்பா, அண்ணன், தம்பிகள் பார்த்தால் என்ன ஆகும்?
இதுபோன்ற அந்தரங்க காட்சிகளை ஆபாசமாக வீடியோ பதிவு செய்வது கணவனே என்றாலும்கூட அனுமதிக்கக் கூடாது. கணவன் மனைவிக்குள் பிரச்சனை வரும்போது பழிவாங்க இதை அஸ்திரமாக பயன்படுத்திவிடுவார்கள்'' என்று எச்சரிக்கிறார் அவர் அறிவுரையாக.
""இப்படி மத்தவங்களோட அந்தரங்கத்தை ஒளிஞ்சி இருந்து பார்க்கிறது... அதை வீடியோ எடுத்து ரசிக்கிறது... வயரிஸம் எனப்படும் மனப் பிரச்சனை. இப்படிப்பட்ட நபர்களுக்கு நாளடை வில் மன ரீதியாகவும் குடும்ப ரீதியாக பல்வேறு பிரச்சினைகள் உண்டாக்கிடும். சில ஆண்கள் தங்களை பெருமைப்படுத்திக்க இப்படி கேவல மான வேலைகளில் ஈடுபடுறாங்க. சில ஆண்கள் அப்படி வீடியோ எடுத்து அந்த பெண்ணை அடுத் தடுத்து தனது தேவைக்கு யூஸ் பண்ணிக்க இப்படி பண்றாங்க. அந்தப் பெண்ணின் மீதுள்ள குரோதத்தை தீர்த்துக்க இப்படி எடுக்குறாங்க. எப்படியோ, இது போன்ற காட்சிகளில் தெரிஞ் சோ தெரியாமலோ சிக்கிக்கிற பெண்கள் பெரும்பாலும் தற் கொலை செஞ்சிக் கிறதுதான் அதிகமா நடக்குது. பெரும்பா லான பெண்கள் புகார் கொடுக் காததால் தான்... இந்த மாதிரியுள்ள பொறுக்கி ஆண்கள் சாதகமா பயன்படுத்திக்கிறாங்க.
உயிருக்கு உயிராக காதலிக்கும் காத லனோ, அன்பாக நேசிக்கும் கணவனோகூட சில நேரத்தில் அந்தரங்க காட்சிகளை படம்பிடிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். ’‘வேற வீடியோக்கள பார்த்து போரடிச் சுப் போச்சு. நம்ம "அந்த' நேரத்துல எப்படி இருக்கோம்னு பார்க்க ஆசையா இருக் குடி செல்லம்னு சொல்லி கெஞ்ச... உடனே குடும்பப் பெண்கள்கூட உடன் பட்டுடுறாங்க. ஆண்களுக்கு நிகராக இருக்கிறேன் என்ற பெயரில் ஓவர் போதைக்கு அடிமையாகி படம் பிடிப் பதை தடுக்க இயலாமல் சிக்கிக் கொள்கிறார்கள். ஆனா, இப்படி எடுக்கப்படுற பல வீடியோக்கள் டெலிட் பண்ணாமத்தான்... இப்படி இண்டெர்நெட்டுகளிலும் செல்ஃபோன்களிலும் உலவிக்கிட்டிருக்கு. அப்படிப்பட்ட அந்தரங்க வீடியோக்களை டெலிட் பண்ணிட்டாக்கூட... செல்ஃபோன் கடைகளில் ரிப்பேர்னு கொடுக்கும் போது ரெக்கவரி சாஃப்ட்வேர் மூலமா டெலிட் பண்ணப்பட்ட வீடியோக் களை செல்ஃபோன் மெமரி கார்டிலிருந்து திரும்ப எடுக்கமுடியும்ங்கிற அளவுக்கு டெக்னாலஜி வளர்ந்துடுச்சு. இதை, பணத்துக்காக டவுன்லோடு பண்ணி விற்க ஆரம்பிச்சிடுறாங்க. பெரும்பாலும் தங்களின் அந்தரங் கத்தை வீடியோ எடுப்பதை விலைமாதுக்கள்கூட விரும்புவதில்லை. அப்படியிருந்தும் இப்படி ஆவதற்கு காரணம்... பெண்கள் பாலியல் பலாத் காரம் செய்யப்படும்போது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை வரைதான் பெரும் பாலான பெண்களால் தடுக்க முடிகிறது. அப்படித்தான் அந்தரங்கத்தில் ஈடுபடும்போது பெண்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு ஒரு குறிப்பிட்ட நிலையை தாண்டும்போது "ப்ளீஸ் வேண்டாம்'னு அந்த பெண்கள் சொல் லிக்கொண்டிருந்தாலும் முழுமையாக வக்கிர கேமராவை தடுக்க முடியாமல் தவிக்கிறார்கள். இந்த தவிப்பின் சூழ்நிலையைத்தான் சில வக்கிர ஆண்கள் தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்கிறார்கள். ஆனால், சுகத்துக்கு அடிமையாகிவிடாமல் ஒரு நிமிடம் யோசித்து அந்தப் பெண் அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்தி தடுத்துவிட்டால் போதும். நிச்சயமாக... அந்தரங்க வீடியோக்களில் சிக்குவதிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும்.
வயது வந்த ஒரு ஆணும் பெண்ணும் அவர்களின் சுய விருப்பத்தோடு ஒன்றாக இருப்பது அவர்களது விருப்பம். ஆனால், அதை படம்பிடிப்பது... சமூக வலைத்தளங்களில் பரப்புவது மிகப்பெரிய சமூகக் குற்றம். இதில் 99 சதவீதம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். அதனால், பெண்கள் எப்போதும் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருந்துக்கணும்'' என்கிறார் பிரபல மனநல ஆலோசகர் டாக்டர் அபிலாஷா.
இப்படிப்பட்ட குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை? சென்னை மாநகர சைபர் குற்றப் பிரிவு உதவி கமிஷனர் ஜெகஃபர் சாலியிடம் கேட்டபோது, ""இப்படி பெண்களின் அந்தரங்கங்களை படம்பிடித்து வெளியிட்டால் தகவல் தொழில்நுட்ப சட்டம் -2000... செக்ஷன் 67-ன்படி ஐந்துலட்சம் அபராதமும் மூன்றாண்டுகள் கடும்காவல் தண்டனையும் விதிக்கப்படும். இரண்டாவது முறையும் அப்படி செய்தால் பத்துலட்சம் அபராதம், ஐந்து வருடம் சிறை தண்டனை விதிக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்தால் புகார் தரும் பெண்கள் குறித்து ரகசியம் காக்கப்பட்டு விசாரித்து நடவடிக்கை எடுப்போம்'' என்கிறார் உறுதியாக.
பெண்களே... புகார் கொடுங்கள்... இல்லை என்றால்... எச்சரிக்கையாக இருங்கள்!
-மனோ
thanks nakkeeran + sharmini brisbane

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக