இந்த நிலையில், விஜயகாந்தின் தே.மு.தி.க. புதுக்கோட்டை இடைத் தேர்தலில் ஆதரவு தருமாறு தி.மு.கவை கேட்கும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் மச்சானும், இளைஞரணி செயலாளருமான சுதீஷ் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
இந்த இடைத் தேர்தலில், தேமுதிக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உள்ளதாலும், புதுக்கோட்டை தொகுதியில் ஓரளவு முஸ்லீம் மக்கள் உள்ளதாலும், தங்களது வேட்பாளர் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் தேமுதிக இம்முறை நம்பிக்கையோடு உள்ளது.
மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் முத்துக்குமரன் மறைவு சம்பவமும், அந்த இடத்தில் அதிமுக போட்டியிடுவதும் தங்களது சாதகம் என தேமுதிக கருதுகிறது. இதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் மனதார அதிமுகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள், தங்களுக்கே வாக்களிப்பார்கள் என தேமுதிக நம்புகிறது.
தேமுதிக இப்படி காய் நகர்த்தினால், திமுக தனது ராஜதந்திர அரசியலை அரங்கேற்றம் செய்ய தயராக உள்ளது. தே.மு.தி.க. தாமாக முன் வந்து ஆதரவு கேட்டால், ஆதரவு கொடுக்கலாம். அவ்வாறு மறைமுக ஆதரவு கொடுத்தால், தேமுதிகவுக்கும், அதிமுகவுக்கும் உள்ள வாக்கு வித்தியாசத்தை கட்டுப்படுத்தலாம்.
தேமுதிகவுக்கு ஆதரவு தருவதன் மூலம் அரசியல் நட்பு பலப்படும். மேலும், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியான தேமுதிகவும், மற்றொரு பலம் வாய்ந்த கட்சியான திமுகவும் ஓரணியில் நின்றால் அதிமுகவை இலகுவாக சமாளிக்கலாம். இந்த புதுக் கூட்டணி மூலம் அதிமுகவிற்கு கடும் நெருக்கடி கொடுக்கலாம் என்பது ஒரு கணக்கு
மேலும், ஜனாதிபதி தேர்தலின் போது, தேமுதிகவை காங்கிரஸ் பக்கம் வளைத்து விடலாம். அது மட்டுமல்ல, ராஜ்யசபா தேர்தல் வரும் போது, தேமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்குகளை திமுகவிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது திமுகவின் சூப்பர் பிளான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக