“சங்கரன்கோவிலில் அனைத்துக் கட்சிகளும் போட்டியிட்டன. நாங்களும் போட்டியிட்டோம். அங்கே ஜெயிப்பதற்காக ஜெயலலிதா அமைச்சர் பட்டாளத்தை அனுப்பி வைத்தார். இப்போது புதுக்கோட்டையில், நிலைமை வேறு. அ.தி.மு.க.-வுக்கு எதிராக போட்டியிடும் ஒரே கட்சி தே.மு.தி.க.-தான். ஆனால், சங்கரன்கோவிலுக்கு அனுப்பியதைவிட அதிக அமைச்சர்களை புதுக்கோட்டைக்கு அனுப்பியிருக்கிறார்.
இதிலிருந்து என்ன தெரிகிறது? எங்களைப் பார்த்து ஜெயலலிதா பயப்படுகிறார் என்று தெரியவில்லையா?” இப்படி லாஜிக்காக கேட்டிருக்கிறார், விஜயகாந்த். அது நிஜமோ, இல்லையோ, அ.தி.மு.க.-வால் பதில் கூற முடியாத கேள்வி.
விஜயகாந்த், அவரது கட்சி, மற்றும் அவரது வேட்பாளர் ஆகிய மூன்று ஃபாக்டர்கள் மீதும், பயம் கிடையாது என்றால், 32 அமைச்சர்களுக்கு புதுக்கோட்டையில் என்ன சோலி?
“கோட்டையில் அவர்கள் செய்வதற்கு பணி ஏதுமில்லை, சும்மா ஜாலியாக வந்திருக்கிறார்கள்” என்று பதில் சொன்னால், “செய்வதற்கு பணி இல்லாமல் அவர்கள் ஏன் அமைச்சர்களாக இருக்கிறார்கள்?” என்ற அடுத்த கேள்வியை விஜயகாந்த் கேட்கத் தேவையில்லை. எல்லோரும் கேட்பார்கள்.
பெட்ரோல் விலை உயர்வில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திருச்சியில் நேற்று (வெள்ளிக்கிழமை)
தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து விஜயகாந்த் பேசியபோதே, ஜெயலலிதா தம்மைப் பார்த்து பயப்படுகிறார் என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விஜய்காந்த்துக்கு ‘திராணியார்’ என்று பட்டம் கொடுத்து மகிழ்ந்தார்கள் அவரது கட்சிக்காரர்கள். அதன் பின்னணியில் இருப்பவரும், ஜெயலலிதாதான்.
சட்டசபையில் அ.தி.மு.க., தே.மு.தி.க. இடையே மோதல் வந்தபோது, “விஜயகாந்துக்கு ‘திராணி’ இருந்தா சங்கரன்கோவில் தொகுதியில தனிச்சுப் போட்டியிடட்டும்” என்று முதல்வர் ஜெயலலிதா பகிரங்க சவால் விட்டார். திராணி இருக்கிறது என்று காட்ட விஜயகாந்த் தனது கட்சி வேட்பாளரை அங்கே நிறுத்த வேண்டியதாயிற்று.
அந்த வேட்பாளர் எத்தனை ஓட்டு வாங்கினார் என்பது வேறு விஷயம். ஆனால், “திராணி இருக்கிறது என்று காட்டிவிட்டார் தலைவர். அதனால் பிடியுங்கள், திராணியார் பட்டம்” என்பது தே.மு.தி.க.-வினரின் ஸ்டான்ட்! (அல்லது ஸ்டன்ட்?)
ஜெயலலிதா புதுக்கோட்டைக்கு 32 அமைச்சர்களை அனுப்பியது எந்தளவு காமெடியோ, அதற்கு சற்றும் குறைந்ததல்ல இந்த காமெடி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக