ரஷ்யாவில் உள்ள மாஸ்கோவில் நடைபெற்ற உலக சேஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த், இஸ்ரேலின் போரிஸ் ஜெல்பான்ட்டை வீழ்த்தி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றார். இதனையடுத்து பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் ஜெயலலிதா உட்பட பல தலைவர்களும் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று தமிழகத்திற்கு திரும்பும் விஸ்வநாதன் ஆனந்த்திற்கு, தமிழக அரசின் சார்பில் ரூ.2 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளர்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
உலக செஸ் போட்டியில் 5வது முறையாக விஸ்வநாதன் ஆனந்த் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இதில் தொடர்ச்சியாக 4 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இதன் மூலம் அவர் இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை தேடித் தந்துள்ளார்.
பலமுறை உலக சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டுள்ள அவரது ஈடு இணையற்ற சாதனையை அங்கீகரித்து, அவரை கெளரவப்படுத்தும் வகையில் அவருக்கு ரூ.2 கோடி பரிசுத்தொகை வழங்க உத்தரவிட்டப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக