டெல்லி: தென்சீனக் கடற்பரப்பில் வியட்நாமுக்கு சொந்தமான
பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவந்த எண்ணெய் அகழாய்வுப் பணிகளை திடீரென
நிறுத்துவதாக இந்தியா அறிவித்துள்ளது.
இந்தியாவுக்கும் வியட்நாமுக்கும் இடையே 2006-ம் ஆண்டு தென்சீனக் கடற்பரப்பில் எண்ணெய் அகழாய்வு தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போதே சீனா கடும் எதிர்ப்புத் தெரிவித்தது.
தென்சீனக் கடற்பரப்பில் இந்தியாவின் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வந்தன. அவ்வப்போது சீனாவும் இந்தியா வெளியேற வலியுறுத்தி வந்தது. இந்தப் பணிகளுக்காக ரூ244 கோடி இந்தியா முதலீடு செய்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை தென்சீனக் கடற்பரப்பு உலகின் பொதுச்சொத்து என்பதே நிலைப்பாடு. இக்கடற்பரப்பில் அதிக எண்ணெய்வளம் இருப்பதால் ஒட்டுமொத்த தென்சீனக் கடலும் தமக்கே சொந்தம் என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது.
ஆனால் பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனே ஆகிய நாடுகளும் தங்களுக்கும் இக்கடற்பரப்பில் உரிமை இருப்பதாகக் கூறி வருகின்றன.
கடந்த ஒருமாத காலமாக தென்சீனக் கடற்பரப்பில் உள்ள ஹூவாங்யான் தீவுக்கு உரிமை கோரி பிலிப்பைன்ஸும் சீனாவும் எந்த நிமிடத்திலும் மோதலில் ஈடுபடலாம் என்ற நிலைமை நீடித்து வருகிறது.
இந்நிலையில் இந்தியாவோ தென்சீனக் கடற்பரப்பில் மேற்கொண்டிருந்த அகழாய்வுப் பணியை நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக