கும்பகோணம்: தலைக்காவிரிக்கு ஒரு பெண்ணோடு ஓடிப்போனவர்
தான் காஞ்சி ஜெயேந்திரர் என்று மதுரை ஆதீனம் அருணகிரி நாதர்
தெரிவித்துள்ளார்.
மதுரை ஆதீனமாக நித்யானந்தாவை நியமித்ததற்கு
பல்வேறு ஆதீனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ரஞ்சிதா என்ற பெண்ணை
எப்போதும் பக்கத்தில் வைத்துக் கொண்டு சுற்றும் நித்யானந்தாவுக்கு ஆதீனம்
பட்டம் வழங்கியதை ஏற்க முடியாது என்று காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் கமெண்ட்
அடித்தார். இதற்கு நித்யானந்தா எதிர்ப்பு தெரிவித்தார். தனக்கு எதிரான
கருத்தை பத்து நாட்களில் ஜெயேந்திரர் வாபஸ் பெறவேண்டும் என்றும் கெடு
விதித்தார்.
மேலும் ஜெயேந்திரரை எதிர்த்து நீதிமன்றத்தில் ரஞ்சிதா வழக்கும் தொடர்ந்துள்ளார்.இந்நிலையில் ஜெயேந்திரர் குறித்து மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கடந்த 1987ம் ஆண்டு ஜெயேந்திரர் ஒரு பெண்ணோடு காஞ்சி மடத்தில் இருந்து தலைக்காவிரிக்கு ஓடிப் போய்விட்டார் என்று தகவல் கிடைத்தது. உடனே காஞ்சி மடத்தை தொடர்பு கொண்டோம். அப்போதைய மேலாளர் கிருஷ்ணமூர்த்தி அய்யர் மூலம் அப்போதைய மகா பெரியவரிடம் சொல்லி தலைக்காவிரியில் இருந்த ஜெயேந்திரருடன் தொலைபேசியில் பேசினேன்.
இந்த பிரச்சனைக்கு உடனே தீர்வு காண வேண்டும். எதுவாக இருந்தாலும் உடனே காஞ்சி மடத்திற்கு திரும்பி வாருங்கள் என்று வலியுறுத்தினோம். இதை அவர் நன்கு அறிவார் என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக