சுந்தர்.சி
இயக்கத்தில் விமல், மிர்சி சிவா அஞ்சலி, ஓவியா ஆகியோர் நடிப்பில்
வெளிவந்துள்ள படம் ‘கலாலப்பு’ சுந்தர்.சி இயக்கும் இந்த 25-வது படம் ரசிகர்கள்
மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ருள்ளது என்னதான் படம் நன்றாக இருந்தாலும்
குறை சொல்லும் அளவிற்கு ஏதாவது ஒரு காட்சி படத்தில் இருக்கும்.
அந்த
வகையில் கலகலப்பு படத்தில் பலர் குறையாய் சுட்டிக் காட்டும் காட்சி
அஞ்சலியும், ஓவியாவும் போடுள்ள குத்தாட்ட பாடலைத் தான். சிலர் ஆபாச நடனம் என்றும் கூறிவிட்டதால் இதை பற்றி கேட்டபோது சுந்தர்.சி ”அஞ்சலியை இதுவரை எல்லோரும் ஒரு ஏழைப் பெண்ணாகவும், சுரிதார் அணிந்துகொண்டும் தான் பார்த்திருக்கிறார்கள்.
அந்த கதாபாத்திரங்களில் நன்றாக நடித்து அஞ்சலி வெற்றியும் பெற்றிருக்கிறார். ஆனால் அதேபோல் அஞ்சலியால் கவர்ச்சியாகவும் நடிக்கமுடியும் என்பதை நிரூபிக்கத்தான் கவர்ச்சியாக ஆட வேண்டும் என சொன்னேன்.
இதைக்கேட்ட அஞ்சலி ’சார் எனக்கும் அப்படி நடிக்கத் தான் சார் ஆசை’ என்று கூறினார். நடித்தும் காட்டியுள்ளார்” என்று கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக