Viruvirupu
சிரஞ்சிவியின் மூத்த மகள் சுஷ்மிதாவலின் சென்னை, போயஸ் கார்டன் வீட்டு படுக்கையறையில் 35.66 கோடி ரூபாய் பணம் புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பூமிக்கடியில் பள்ளம்தோண்டி, 500, 1000 ரூபாய் நோட்டு கட்டுகளாக 35 அட்டைப்பெட்டிகளில் பெட்டிக்கு ஒரு கோடி வீதம் அடுக்கி வைத்திருந்தார்கள். அத்துடன் 4 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களும் இருந்தன.
அன்றைய தினத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வருமானவரி ரெயிடுகள் நடைபெற்றன. அன்றைய ஆபரேஷனுக்கு ரெயிடு குழுக்களை அனுப்பி வைத்தவர்கள் மொத்தம் 3 உயரதிகாரிகள் என்கிறார்கள். இதில் இரண்டு அதிகாரிகளுக்கு, போயஸ் கார்டன் வீடு சிரஞ்சிவியின் மருமகனின் வீடு என்பது தெரியும். மேலிடத்திலிருந்து கிளியரன்ஸ் கிடைத்ததால் அவர்கள் கவலைப்படவில்லை.
ஆனால், ரெயிடு குழுவை அனுப்பி வைத்த அதிகாரிகளில் மூன்றாவது நபருக்கு (இவர் டில்லி ஆபீஸில் இருக்கிறார்), வருமானவரி சோதனை நடந்துகொண்டிருந்த போதுதான், இந்த வீடு சிரஞ்சிவியுடன் தொடர்புடையது என்ற விபரம் தெரியவந்தது என்கிறார்கள். அவர் உடனடியாக ‘மேலே’ தொடர்பு கொண்டு, என்ன செய்வது என்று கேட்டிருக்கிறார்.
“ரெயிடுதானே.. அவங்க வேலையை அவங்க பார்க்கட்டும். எதையும் தடுக்க வேண்டாம்” என்று மர்மச் சிரிப்புடன் பதில் வந்ததில், ஆச்சரியத்துடன் அமைதியாகி விட்டார் அந்த அதிகாரி.
ரெயிடு முடிந்தது. கிடைத்த பணத்தை வாரிக்கொண்டு சென்றார்கள், ரெயிடு வந்த அதிகாரிகள்.
ரெயிடு நடைபெற்று இரண்டு நாட்களின் பின்னரே விவகாரம் டில்லி மீடியா சர்க்கிள்களில் சூடுபிடிக்க துவங்கியது. அதற்கு காரணம், பா.ஜ.க. எம்.பி. ஒருவர், டில்லி மூத்த செய்தியாளர் ஒருவருடன் காஷுவலாக பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு விஷயத்தை குறிப்பிட்டார்.
“காங்கிரஸ் பாரபட்சம் இல்லாமல் ரெயிடு செய்கிறது என்று இதை எடுத்துக் கொள்ள கூடாது. ரெயிடு போகப் போகிறார்கள் என்பது சிரஞ்சிவிக்கு தெரியும். இன்-ஃபாக்ட், தமிழக அமைச்சர் ஒருவரிடம் “ரெயிடு செய்யுங்கள்” என்று தூண்டிவிட்டதே சிரஞ்சிவிதான்” என்றார் அந்த பா.ஜ.க. எம்.பி.
அவருடன் பேசிக்கொண்டிருந்த மூத்த செய்தியாளர், சகல அரசியல் தலைவர்களுடன் நெருக்கமானவர் என்ற போதிலும், வெளிப்படையான காங்கிரஸ் அனுதாபி என்று டில்லி மீடியா சர்க்கிள்களில் அனைவருக்கும் தெரியும். இவர் என்ன செய்தார் என்றால், தாம் சார்ந்திருந்த பத்திரிகையில் இந்த ஸ்கூப்பை பிளாஷ் செய்யவில்லை.
கிடைத்த தகவலை அப்படியே, டில்லியில் உள்ள மூன்றெழுத்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு கைமாற்றி விட்டுவிட்டு சும்மா இருந்துவிட்டார்.
தமாஷ் என்னவென்றால், அவர்களும் அதை ‘ஏதோ காரணங்களுக்காக’ பிளாஷ் செய்யவில்லை. ஆனால், அவர்கள் வெளிநாட்டுக்கு அனுப்பும் நியூஸ்-ஒயரில், “இதில் சிரஞ்சீவிக்க தொடர்பு இருக்கலாம்” என்று ஒரு வாக்கியம் உள்ளது. லோக்கல் நியூஸ்-ஒயரில், அந்த வாக்கியம் மிஸ்ஸிங்.
அதன்பின் விஷயம் அமுங்கிப் போனது. (அமுக்கி வைக்கப்பட்டது?)
இந்த ரூட்டில் விசாரித்தால், சில விஷயங்கள் கிடைக்கின்றன. சிரஞ்சிவியின் மருமகன் விஷ்ணு
பிரசாத் குடும்பம், சிரஞ்சிவிக்கு எந்த விதத்திலும் குறையாத பணபலம் மற்றும், செல்வாக்கு உள்ள குடும்பம். ரியல் எஸ்டேட் துறையில் அவர்கள் பெரிய ஆட்கள். அத்துடன் கிரானைட் குவாரிகள், மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றிலும் அசைக்க முடியாத ஆட்கள்.
விஷ்ணு பிரசாத்தும், சிரஞ்சிவி மகள் சுஷ்மிதாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். ஆனால், சுஷ்மிதாவுக்கு, மாமனார் வீட்டாருடன் அவ்வளவாக சரிப்பட்டு வரவில்லை. இதனால், சிரஞ்சிவிக்கும், சம்மந்தி வீட்டாருக்கும் இடையே உரசல்.
உச்சக்கட்டமாக சுஷ்மிதா, கணவர் விட்டில் இருந்து கிளம்பி, தாய்வீட்டுக்கு சென்று விட்டார். இரு தரப்பும் விவாகரத்து செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. திருமனத்தின்போது கொடுக்கப்பட்ட சில சொத்துக்கள் தொடர்பாகவும் சிக்கல்.
இந்தப் பின்னணியில், சிரஞ்சிவியின் ஆசியுடன், அவரது நண்பராக தமிழக அமைச்சர் ஒருவரின் உதவியுடன், ரெயிடு லிஸ்டில் போயஸ் கார்டன் வீடு சோந்து கொண்டது என்பதே எமக்கு கிடைத்த தகவல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக