முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர்
ஆ.ராசாவுக்கு எதிரான 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இன்று ஜாமீன்
கிடைத்துள்ளது. திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆ. ராசா சுமார் 15
மாதங்களுக்குப் பிறகு இன்று ஜாமீனில் வெளிவந்தார்.
இவரை திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட பல்வேறு திமுகவினர் வரவேற்று வாழ்த்து தெரிவித் தனர். நீதிமன்ற உத்தரவு இன்றி ஆ. ராசா தமிழகத்திற்கு செல்லக்கூடாது என்றும் ரூ.30 லட்ச ரூபாய் ஜாமீன் தொகையாக கட்டவேண்டும் என்ற நிபந்தனைகளின் பேரில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இவருக்கு ஜாமீன் கிடைத்தது குறித்து திமுக எம்.பி.யான டிகேஎஸ். இளங்கோவன்,
’’ஜாமீனிலிருந்து வெளிவந்த ஆ. ராசாவுக்கு திமுக முழுமையாக ஆதரவு தரும். திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக அவர் தொடர்ந்து நீடிப்பார். நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்கிறோம். சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் பாதுகாப்பு வேண்டுமா என்பதை ராசாவே முடிவு செய்வார்’’ என்று தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக