புதிய சட்டத் திருத்தம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
புதுடெல்லி, மே.18- திருமண ரத்துரிமை பெற்றவர்களாக இருந் தாலும் பெண்ணுக்குக் கணவரின் சொத்தில் பங்கு உண்டு என்ற புதிய சட்டத் திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள் ளது. மாநிலங்களவையில் கடந்த 2-ஆம் தேதி, திருமண சட்டங்களில் திருத்தம் செய்வதற்கான முன் வரைவு சட்டம் தாக்கல் செய்யப்பட் டது. மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், அம்மசோ தாவை தாக்கல் செய்தார்.
பரஸ்பர விருப்பத் துடன் திருமண ரத்து கேட்டு மனு செய்யும்
இணையர்களுக்கு, அவர்களின் முடிவை மறுபரிசீலனை செய்ய 6 மாத கால அவகாசம்
அளிக்கப்படுகிறது. அந்த கால அவகா சத்தை ரத்து செய்யும் வகையில், இந்த சட்ட
முன் வரைவு கொண்டு வரப்பட்டது.புதுடெல்லி, மே.18- திருமண ரத்துரிமை பெற்றவர்களாக இருந் தாலும் பெண்ணுக்குக் கணவரின் சொத்தில் பங்கு உண்டு என்ற புதிய சட்டத் திருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள் ளது. மாநிலங்களவையில் கடந்த 2-ஆம் தேதி, திருமண சட்டங்களில் திருத்தம் செய்வதற்கான முன் வரைவு சட்டம் தாக்கல் செய்யப்பட் டது. மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், அம்மசோ தாவை தாக்கல் செய்தார்.
ஆனால், அந்தச் சட்ட முன்வரைவு, பெண்களின் நலன் களுக்கு எதிராக இருப் பதாகவும், திருமண ரத்து பெறுவது எளி தாகி விட்டால், பெண் கள் தங்களது உரிமை களை இழக்க நேரிடும் என்றும் மாநிலங்கள வையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் அச்சம் தெரிவித்தனர்.
சட்டமுன் வரைவு அவசர கதியில் கொண்டு வரப்பட்டு இருப்பதாக வும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சல்மான் குர்ஷித், சட்ட முன் வரைவு மீதான விவாதத்துக்கு பதில் அளிப்பதை ஒத்தி வைத்தார்.
இந்நிலையில், மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள இந்த திருத்த மசோதாவில் மேலும் திருத்தங்கள் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலை மையில் நேற்று நடை பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த ஒப்பு தல் அளிக்கப்பட்டது.
திருமண ரத்து என் பது பெண்களுக்கு சாதகமானதாக இருக்க வேண்டும் என்ற அனைத்துக் கட்சி நாடா ளுமன்ற உறுப்பினர் களின் வேண்டுகோ ளுக்கு இணங்க இந்தப் புதிய திருத்தம் கொண்டு வரப்படுகிறது.
இதன்படி, ஒருவருக் கொருவர் விருப்பத் துடன் விவாகரத்து கேட் டாலும், 6 மாத காலம் பொறுத்திருக்க வேண் டும் என்ற விதிமுறையை தொடர்ந்து கடைப் பிடிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
ஒருவேளை, இந்த 6 மாத கால அவகாசத்தை ரத்து செய்யவோ அல் லது குறைக்கவோ விரும்பினால், கணவன்-மனைவி இருவருமே சேர்ந்து விண்ணப்பிக்க வேண்டும் என்று புதிய திருத்தங்களில் கூறப் பட்டுள்ளது. ஒரு தரப்பு மட்டும் விண்ணப்பிக்க முடியாது.
மேலும், விவாகரத்து ஆன பெண்களுக்கும், அவருடைய குழந்தை களுக்கும் கணவரின் அசையா குடியிருப்பு சொத்துகளில் தெளி வாக வரையறுக்கப் பட்ட பங்கு உண்டு என்றும் இந்த புதிய திருத்தங்களில் கூறப் பட்டுள்ளது.
இந்தப் பங்கைப் பெற, திருமண ரத்து பெற்ற பிறகு, இணையர் தனியாக மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக