வியாழன், 11 நவம்பர், 2010

யாழ் அரச அதிபருக்கு கொலை அச்சுறுத்தல் ‐ இன்று முதல் திடீரென ராணுவ பொலிஸ் பாதுகாப்பு!


யாழ் அரச அதிபருக்கு இன்று முதல் திடீரென ராணுவ பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை அவருக்கு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் கொலை அச்சுறுத்தலை அடுத்தே இந்த ராணுவ பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அவரது வாசஸ்தலம் அமைந்திருக்கும் பழைய பூங்காவிற்கு படையினரின் பூரண பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதைக் காணக் கூடியதாக இருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்கள் இடைவெளியின் பின்னர் இன்று யாழ்ப்பாணத்திற்கு திரும்பியுள்ள இமெல்டா சுகுமார் தனது கடமைகளை யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் அவருக்கு தொடர்ச்சியாக தொலைபேசியூடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் யாழ் மாவட்ட தரப்புகள் இதனை உறுதிப்படுத்த மறுத்துள்ளன.

கருத்துகள் இல்லை: