மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் பெருந்தொகையான பெண்கள் பால்குடம் ஏந்தி பாதயாத்திரையில் ஈடுபட்டனர். நேற்று காலை 8.00 மணிக்கு ஆரம்பமான பால்குட பவனி, பிரதான வீதி, பாடசாலை வீதி, செங்குந்தர் வீதி உட்பட பல வீதிகளூடாக, சுமார் 5 மணிநேரம் பயணித்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஆரையம்பதி ஸ்ரீசித்திவிநாயகர் பேச்சியம்மன் ஆலயத்தின் நிர்வாக சபையினர் இந்த பவனியை ஏற்பாடு செய்திருந்தனர். பவனியில் பங்குகொண்ட பெண்கள் மஞ்சள் நிற ஆடை அணிந்திருந்தனர்.
ஆலய முன்றலிலிருந்து பவனி ஆரம்பமானது. பவனி முடிவில் 1008 சங்குகள் வைத்து சங்காபிஷேகம் நடத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக