.மண்டைதீவில் கிராமத்தில் பெண்களைக் குடும்பத் தலைவர்களாகக் கொண்ட குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வீடுகளை அமைப்பதற்கான நிதி அனுசரணை, தொழில்நுட்ப ஆலோசனை என்பவற்றை "நிக்கொட்' நிறுவனம் வழங்கவுள்ளது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதேயளவான தொகையை குடும்பத்தவர்கள் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் வீடுகட்ட உள்ள காணிகளை அங்குவந்த "நிக்கொட்' நிறுவன உத்தியோகத்தர்கள் பார்வையிட்டுச் சென்றுள்ளனர். மண்டைதீவு கிழக்கில் உள்ள கணவனை இழந்த நான்கு பெண்கள் இந்த வீட்டுத் திட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அம்மன் வீதியில் உள்ள சோலைப் பிட்டியில் இவர்களுக்கான வீட்டுத் திட்டம் அமைய உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அனைத்தையும் இழந்து குடும்பத்தலைவர்களையும் இழந்த இவர்கள் மேலதிகமாகத் தேவைப்படும் பணத்தைப் பெற முடியாத நிலையிலுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக