புதன், 10 நவம்பர், 2010

கடந்த கால வினாப் பத்திரங்கள் கல்வியமைச்சின் அச்சகத் திணைக்களத்தினால் அச்சிடப்பட்டு விற்பனை : ஆசிரியர் சங்கச் செயலாளர் கண்டனம்!


கல்வி அமைச்சு பரீட்சை வினாப் பத்திரங்களை விற்பனை செய்வது இலவசக் கல்வியை காசு கொடுத்து வாங்குவதற்கு வழியேற்படுத்தியுள்ளது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

“புலமைப் பரிசில் பரீட்சை கடந்த கால வினாப் பத்திரங்களை கல்வியமைச்சின் அச்சகத் திணைக்களத்தினால் அச்சிடப்பட்டு 150 ரூபாவுக்கு விற்பதற்கு கல்வியமைச்சு தீர்மானம் எடுத்துள்ளது. அத்துடன் க.பொ.த சாதாரணதர பரீட்சை கடந்த கால வினாப் பத்திரங்கள் அடங்கிய புத்தகம் 185 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
இவ்வருடம் நடைபெறவுள்ள க.பொ.த சதாரணதர பரீட்சையோடு தொடர்புடைய கல்வி அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்ட கருத்தரங்குகளில் மாதிரி வினாப் பத்திரங்களை விற்பனை செய்வதற்கும் கல்வி அமைச்சு தீர்மானம் எடுத்துள்ளது.
இவ்வாறு பரீட்சை வினாத்தாள்களை அச்சிட்டு விற்பதானது இனிவரும் காலங்களில் இலவசப் புத்தகங்களையும் காசு கொடுத்து வாங்க வேண்டியேற்படும். கல்வி அமைச்சானது வியாபார அமைச்சல்ல. கல்வியை வழங்கக் கூடிய சேவை நிறுவனமாகும்” என்றார்.

கருத்துகள் இல்லை: