லிபியா நாட்டிற்கு வேலைக்கு சென்று, கொடுமை தாங்காமல் திரும்பி வந்த தமிழகத்தை சேர்ந்த 22 பேர், "வாழ வழியில்லாத நிலையில் உள்ள தங்களது குடும்பத்தை காக்க, ஏஜன்ட்களிடம் கொடுத்த பணத்தை பெற்று தர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, கூறினர்.
மதுரை மேலூர், கீழையூரில் டிராவல்ஸ் நடத்தி வருபவர் சக்திவேல். இவர், ராமநாதபுரம் மாவட்டம் மட்டியனேந்தலில் சப் ஏஜன்டாக செயல்படும் மலைராஜ், சொக்கலிங்கம் மூலம் இளைஞர்கள் பலரை, வேலைக்காக லிபியா நாட்டிற்கு அனுப்பினார். இவர்களில் ராமநாதபுரம் பிரபு (கொடிக்குளம்), சத்தியமூர்த்தி (உத்தரகோசமங்கை), முனியசாமி(காவல்கொட்டகம்), முருகன் (தோளூர் தெற்குப்பட்டி), தர்மலிங்கம்(பெருமாள்கோவில்), சந்திரசேகர் (நெடுங்குளம்), ராஜகருங்கு(மல்லல்), இளங்கோ (அரசநகரி), கோபிகண்ணன் (ஆழிமதுரை) அடங்குவர். இவர்கள் உட்பட தமிழகத்தை சேர்ந்த 22பேர், கடந்த 2009 டிச., 18 ல், ஒரு லட்சத்து 50ஆயிரம் ரூபாய் கட்டி, கார்பெண்டர், கொத்தனார், கம்பி கட்டும் பணிக்காக 20ஆயிரம் மாத சம்பளம், ஓவர்டைம் ஊதியம் 25 ஆயிரம், தங்குமிடம், சாப்பாடு இலவசம் எனக் கூறி, அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அங்கோ, எல்ராடு கம்பெனியில் மண் சுமக்கும் பணி உள்ளிட்ட கடினமான வேலை கொடுத்து கொடுமைப்படுத்தி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது: தினமும் உணவாக காலை ஒரு பன், மதியம் பச்சரிசி சாதம் ஒரு கரண்டி, இரவு ஒரு பன் கொடுத்து, ஒரு நாளில் 12மணி நேரம் பணி செய்ய வைத்தனர். வேலை நேரத்தில் இயற்கை உபாதைகளுக்கு கழிப்பறைக்கு சென்றால் , ஐந்து நாட்கள் வரை சம்பளத்தில் பிடித்தம் செய்தனர்.சாப்பாடு, சம்பளம் பற்றி கேட்டால், காற்று புகாத கன்டெய்னரில் அரை மணி நேரத்திற்கும் மேல் அடைத்து வைத்து கம்பியால் அடித்தனர். வேலை பார்க்கும்போது காயம் பட்டது எனக் கூறினால், அந்த இடத்திலேயே சிகரெட் சூடு வைத்தனர். அவசரத்திற்கு மருத்துவமனை செல்ல வேண்டுமால் 1000 கி.மீ., பாலைவனத்தை கடந்து தான் செல்ல வேண்டும். இந்த கொடுமை தாங்காமல், தமிழ்நாட்டை சேர்ந்த 22 பேர், மற்ற நாடுகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் முறையிட்டோம்.
இதை தொடர்ந்து அனைவரும் அவரவர் நாட்டு தூதரகத்திற்கு அனுப்பப்பட்டனர். இந்திய தூதரக தலைமை அலுவலர் மணிமேகலை, இந்தியர்களை அங்கேயே இரண்டு மாதங்கள் தங்க வைத்து, காயங்களை குணப்படுத்தி, கம்பெனியில் இருந்து பாஸ்போர்ட் உள்ளிட்டவைகளை பெற்று, இந்தியா அனுப்ப உதவினார். "வாழ வழியற்ற நிலையில் உள்ள எங்கள் குடும்பத்தை காக்க, ஏஜன்ட்களிடம் கொடுத்த பணத்தை பெற்று தர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
சுரேஷ் - SINGAPORE,இந்தியா
2010-11-13 08:13:17 IST
ஏஜன்ட்கள் மனிதாபிமானத்துடன் வாங்கி ய பணத்தை உண்மையான செலவு போக மீதியை உரியவர்களுக்கு திருப்பிகொடுக்க வேண்டும். இல்லையென்றால் அது ஏமாற்றி சம்பாதித்ததுக்கு சமம். மற்றவரை ஏமாற்றியா செயல் குடும்பத்தை பாதிக்கும். நான் நிறைய ஏஜ ண்டுகள் இதுபோன்று கஷ்டபடுவதை பார்த்திருக்கிறேன் உணருங்கள் நன்றி....
திருச்சிக்காரன் - திருச்சி,இந்தியா
2010-11-13 07:59:22 IST
அரசாங்கம் தான் இலவசமாக வீடு தருகிறது, அதற்கு இலவச மின்சாரமும் தருகிறது. இலவச டிவி தருகிறது. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ என்று 30 கிலோ அரிசி மாதா மாதம் தருகிறது. வருடத்திற்கு 100 நாள் வேலை என்று தினக்கூலியாக 100 ரூபாய் வீதம் தருகிறது. அது போக பொங்கலன்று பொங்கல் பை தருகிறது. யப்பா, இது பூலோக சொர்க்கமடா... எல்லாமே இங்கு உழைக்காமல் இலவசமாக கிடைக்கும்போது, உங்களை யாருப்பா லிபியாவில பொய் கஷ்டப்படச் சொன்னது?...
கோ. முருகன் - சிதம்பரம்,இந்தியா
2010-11-13 06:09:51 IST
அடிமை வேலை செய்வதை பெருமையாக நினைக்கும் நபர்கள் இருக்கும் வரை இது நடக்கும். 100 கோடி மக்கள் இருக்கும் நாட்டில் ஆட்கள் தட்டுப்பாடு. இங்கு வேலை செய்ய ஆட்கள் இல்லை. இங்கு இருக்கும் வேலையை பார்த்தாலே நன்றாக இருக்கலாம். வெளிநாட்டில் 12 மணி நேரம் வேலை செய்ய தயாராக இருக்கும் நமது ஆட்கள், உள்ளுரில் 8 மணிநேரம் வேலை செய்ய மறுகிறர்கள். அரசு வேலை செய்யாமல் கூலி கொடுக்கும் பழக்கத்தை நிறுத்தி வேறு திட்டங்களை மக்களுக்கு வழங்கவேண்டும். திரு ராஜராஜன் கூறியது போல் லிபியாவில் நல்ல சூழ்நிலை இருபதாக நிறைய பேர் கூறுகின்றனர்...
நாதன் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-11-13 06:07:41 IST
சட்டங்கள் கடுமையாக்கப்படும் வரை இதுபோன்ற குற்றங்கள் நடைபெறத்தான் செய்யும். சரியான அரசு ஒழுங்குமுறைகளால் மட்டுமே இதை சரிசெய்யலாம். அன்பரசே! நானும் இதைபோன்ற நயவஞ்சக நரிகளுக்கு ஒருகாலத்தில் இறையாக்கப்பட்டவன். வேலையில்லா கொடுமையால்தான் வெளிநாடு செல்கிறோம் அன்பு மனைவியை பிரிந்து, குழந்தை, தாய்-தந்தையை பிரிந்து. மேலும் நாங்கள் வஞ்சிக்கப்படால் என்னதான் செய்வது ?...
WATSON - sharjah,இந்தியா
2010-11-13 02:26:42 IST
paramakudi friends please do not go to abroad with knowing anything about the foriegn country's problem .Is there any safety for your life by god grace you all came by our indian embassy help otherwise if you could die there itself do not do the same mistke again please do good job in india in our india there are lot of facilities and opertunity ok....
ராஜு .சிங்கப்பூர் - சிங்கப்பூர்,இந்தியா
2010-11-13 01:55:51 IST
அரசாங்கம் இந்த ஏழைகளுக்கு உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக