மட்டக்களப்பு பளுகாமம் கோயில் போரைதீவு பிரதேசத்தில் நேற்று மாலை 17 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த சிறுமி இன்று அதிகாலை 1 மணியளவில் மீட்கப்பட்டு, மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் படி சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றுமாலை 7 மணியளவில் கடைக்குச் சென்று வீடு திரும்பிச் சென்று கொண்டிருந்த குறித்த சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். இச்சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் திருமணமான 21 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானவடு தெரிவித்துள்ளார். மேலும், குறித்த நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக