அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால் காங்கிரஸ் மீது மக்களுக்கு மதிப்பு குறையும்.
காங்கிரஸ் இந்த விசயத்தில் துணிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜாவை மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் இதன் காரணமாக தி.மு.க. விலகும் பட்சத்தில் ஆட்சி கவிழாமல் இருக்க காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு கொடுக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது.

சோனியா பற்றி கடந்த காலத்தில் நடந்த விமர்சனம் முடிந்ததாக இருக்கட்டும். இனி நடப்பது நல்லதாக இருக்கட்டும். வலுவான பாதுகாப்பு மிகுந்த இந்தியா உருவாக வேண்டும் என்பதே எங்களது இலக்கு என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
இந்நிலையில் இலங்கை தமிழர் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி உட்பட காங்கிரஸ் கட்சியினரை கடுமையாக தாக்கி பேசி வரும் வைகோ உட்பட மதிமுகவினர் ஜெயலலிதாவின் அறிவிப்பையடுத்து குழப்பத்தில் உள்ளனர்.
காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான ஜெயலலிதாவின் நிலைப்பாடு குறித்து கருத்துக் கூற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மறுத்து விட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக