ஜெயலலிதா சிகிச்சையின் போது என் சித்தியையே பார்க்க அனுமதிக்கவில்லை என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கார்நாடக மாநிலம் குடகில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
சசிகலா முதல்வராக வேண்டும் என்று கண்ணீர்விட்டு கேட்டவர் தான் திண்டுக்கல் சீனிவாசன். தற்போது ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார். பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி மாற்றி மாற்றி பேசுகிறார்.
பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்பதற்காக அவர் குடும்பத்தையே என் பொண்டாட்டி இல்லை, புள்ளைகள் இல்லை என்பார். அவர்களுக்கெல்லாம் பதவி முக்கியம் ஏனெனில் வயதாகிவிட்டது பல நாள் ஆசை தற்போது தான் மந்திரி பதவி கிடைத்துள்ளது. இருக்கும் வரை அந்த பதவி சுகத்தை அனுபவித்து செல்லலாம் என்பதற்காக பேசுகிறார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது ஆளுநர் வித்யாசாகர்ராவ் வந்து சந்தித்தார். அப்படி என்றால் ஆளுநரும் இவர்களுடன் சேர்ந்து பொய் சொல்கிறாரா? அதை ஆளுநரை பார்த்து தான் கேட்க வேண்டும். அக்டோபர் 1ம் தேதிக்கு பிறகு எங்கள் சித்தியையே சிகிச்சை அறைக்குள் விடவில்லை.
ஏப்போதாவது மருத்துவர்கள் சொன்னால் 2 நிமிடங்கள் போய் பார்ப்பார். நோய்தொற்று ஏற்படும் என்பதால் தான் ஜெயலலிதாவை சந்திக்க யாரையும் அனுமதிக்கவில்லை. சிபிஐ விசாரணை வைத்தால் இவர்கள் தான் உள்ளே போவார்கள். அன்று முதல்வராக இருந்தது ஓபிஎஸ்-தான். ஜெ., சிகிச்சையில் இவ்வளவு சந்தேகம் இருக்கும் போது சசிகலா முதல்வராக பதவி ஏற்க சொன்னதும் ஏன் ஏற்றுக்கொண்டார்? பதவியில் ஓட்டிக்கொண்டிருக்க எவ்வளவு வேண்டுமானாலும் பேசுவார்கள். எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் என்ன செய்தாலும், இறுதியில் வெற்றி எங்களுக்கே கிடைக்கும். நீதி தேவதையின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.
பெரும்பான்மை வாக்கெடுப்பு நடைபெற்றால், ஆட்சி கவிழும். ஆட்சி கவிழ்ந்தபின் வரும் தேர்தலில், நாங்கள் பெரும் வெற்றிபெறுவோம். கட்சித் தொண்டர்களுக்கும் மக்களுக்கும், நடக்கும் உண்மைகள் முழுவதும் தெரியும். ஊழல் ஆட்சி என்று விமர்சித்த ஓ.பன்னீர்செல்வத்துடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி அமைத்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்துக்குப் பதில்சொல்லி, நான் தரம் தாழ்ந்துபோக விரும்பவில்லை. இவர்களுக்கெல்லாம் பதில் பேசினாலே அசிங்கம். என்னுடன் உள்ள எம்.எல்.ஏக்கள் பதவிக்காக இல்லை. அதிமுக எனும் கட்சியை காப்பாற்றவே நாங்கள் போராடிக்கொண்டிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். தினகரன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக