Venkat Ramanujam
·
இதே நாளில் 22/9/2016 சென்ற வருடம் ஏன் விலக்கப்பட்டது Z+ என்ற பதிலை #பிஜேபி யும் சொல்ல மறுக்கிறது ..
அடிப்படை கேள்வியை #அதிமுக வும் கேக்க மறுக்கிறது . எப்படிப்பட்ட நம்பிக்கை துரோகிகளை வார்த்து விட்டு சென்று இருக்கிறார் ..
ஒரு
வருடமாகியும் தற்போது வரை மர்மமாக இருந்துவரும் முன்னாள் முதலமைச்சர்
ஜெயலலிதாவின் மரணத்துக்கு முன்பு, அவர் சிகிச்சைக்காக அப்போலோ
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தினம் இன்று. தமிழக மக்கள் அனைவராலும்
எளிதில் மறக்க முடியாத தினமாக ஆகிவிட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி மெட்ரோ ரயில் தொடக்க விழா உள்ளிட்ட மூன்று நிகழ்வுகளில் கலந்துகொண்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மறுநாள் 22ஆம் தேதி இரவு திடீரென உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு, கிரீம்ஸ் சாலையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த முதல் நாளில், ‘காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்’ என்று அப்போலோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. அதன் பிறகு 74 நாள்கள் வரை அவ்வப்போது வெறும் அறிக்கைகள் மட்டுமே வந்துகொண்டிருந்தன. உள்ளூர் தலைவர்கள் முதல் தேசிய தலைவர்கள் வரை யாராலும் ஜெயலலிதாவைப் பார்க்க முடியவில்லை.
ஜெயலலிதாவுக்கு மருத்துவம் பார்க்க லண்டனிலிருந்து சிறப்பு மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் பீலே, டெல்லி எய்ம்ஸிலிருந்து சிறப்பு மருத்துவர்கள், சிங்கப்பூரிலிருந்து பிசியோதெரபி நிபுணர்களும் அப்போலோவுக்கு வருகை புரிந்தனர். அப்போலோ நாள்களுக்கு இடையில் ஜெயலலிதா உடலில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஐசியூவிலிருந்து வேறு அறைக்கு மாற்றப்பட்டார் என்ற தகவலும் வந்தது. ஆனால், டிசம்பர் மாதம் 4ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு ‘கார்டியாக் அரெஸ்ட்’ எனப்படும் இதயச் செயலிழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், கவலைக்கிடமாக உள்ளார் என்றும் அப்போலோ நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
தொடர்ந்து 74 நாள்கள் கழிந்து டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்ததாகத் தகவல் வெளியிடப்பட்டது. சாதாரண காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு என்று அப்போலோவில் அனுமதிக்கப்பட்டவரின் 74 நாள்களும் இதுவரை மர்மமாகத்தான் உள்ளது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் மரணத்தில் மர்மம் உள்ளது என்ற சந்தேகங்களை எழுப்பிய வண்ணம் உள்ளனர்.
ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் பி.ஹெச்.பாண்டியன், மனோஜ் பாண்டியன் இருவரும் கூட்டாக அளித்த பேட்டியில், “மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, ஜெயலலிதா வீட்டில் வாக்குவாதமும், கைகலப்பும் ஏற்பட்டதாகவும், தொடர்ந்து ஜெயலலிதா கீழே விழுந்ததாகவும் ஆனால், அவரை தாங்கிப் பிடிக்கக்கூட ஆள் இல்லாத நிலையில்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்றும் பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்தச் சந்தேகங்களும் இன்னும் தீர்க்கப்படவில்லை.
இதைத் தொடர்ந்து லண்டனிலிருந்து வரவழைக்கப்பட்ட ரிச்சர்ட் பீலே மற்றும் ஜெயலலிதாவுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விளக்கமளித்து மருத்துவர்கள், பல விஷயங்களை ‘மறுத்தவர்கள்’ ஆனார்கள். இடையில், “எங்களிடம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற புகைப்படங்கள் உள்ளன. ஆனால், அந்த பச்சை உடையில் ஜெயலலிதாவை எதிரிகள் பார்த்து விடக்கூடாது என்பதற்காகவே கொலைப்பழி சுமத்தியும் மருத்துவமனை புகைப்படங்களை வெளியிடவில்லை” என்று திவாகரன் மகன் ஜெயானந்த் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்.
ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று பன்னீர்செல்வம் நடத்திய தர்மயுத்தம் முடிந்த நிலையில், அணிகள் இணைப்புக்காகத் தற்போது ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று எடப்பாடி அரசு அறிவித்துள்ளது, ஜெயலலிதாவின் மர்ம மரணத்தின் சந்தேகத்தைத் தீர்க்குமா என்ற எதிர்பார்ப்பை அதிமுகவின் ஒவ்வொரு தொண்டர்கள் மட்டுமல்ல மக்கள் மத்தியிலும் எழுப்பியுள்ளது.
செப்டம்பர் 22... ஜெயலலிதா மரணம் என்ற மர்ம நாவலின் முதல் அத்தியாயம்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக