வெள்ளி, 22 செப்டம்பர், 2017

ஆ.ராசா ! தொலை தொடர்புகள் வசதிகளை விளிம்பு நிலை மக்களுக்கு . 2 G வழக்கு

Adv Manoj Liyonzon i ஆ.ராசா புதிய நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கியது சட்டவிரோதமாம்…
#பதில்
ரிலையன்ஸ் ஜியோ எனும் புதிய நிறுவனம் தொலைத்தொடர்பு சந்தையில் புகுந்தவுடன் சந்தை போட்டியை சமாளிக்க வேண்டி மற்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொலைபேசி மற்றும் இணைய சேவை கட்டணத்தை குறைத்தன.
கட்டணம் குறைந்ததால் எளிய விளிம்பு நிலை மனிதர்களும் தொலைபேசி மற்றும் இணைய வசதியை பயண்படுத்து முடிகிறது
இந்த கட்டண குறைப்பு தொலைத்தொடர்பு துறையில் பணவீக்கத்தை கட்டுப்படுத்துகிறது. (Lowering the price controls the inflation in communication industry)
இந்திய பொருளாதார வளர்ச்சியில் 6.5% பங்கை கொண்டுள்ள தொலைத்தொடர்பு துறையில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த கட்டண குறைப்பு சூழலை உருவாக்கியும், மற்றும் தேவையான இதர அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியது அந்த அமைச்சகத்தின் தலையாய கடமை.
இப்படி கட்டணம் குறைய வேண்டி சந்தை போட்டி உருவாகத்தான் ஆ.ராசா புதிய நிறுவனங்கள் உரிமம் பெற ஆவன செய்தார்.
10% மேல் அலைக்கற்றை பங்கு வைத்திருக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க கூடாது என்பது விதி.
அப்படியானால் 12% அலைக்கற்றை வைத்திருக்கும் ஏர்டெல் மற்றும் 10% வைத்திருக்கும் ஏர்செல் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்காமல் இதர புதிய நிறுவனங்களுக்கு தான் உரிமம் வழங்க முடியும்.
மேலும் தொலைபேசி கட்டணத்தை குறைக்கும் அதிகாரம் தொலைத்தொடர்பு அமைச்சகத்துக்கு இல்லாத காரணத்தால், புதிய நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கி சந்தையில் போட்டியை உருவாக்கி அதன் மூலம் தொலைபேசி கட்டணத்தை குறைக்கும் சூழலை உருவாக்கினால்தான் குறைந்த கட்டண சேவையில் எளிய விளிம்பு நிலை மனிதர்களும் தொலைதொடர்பு சேவையைப் பயன்படுத்த முடியும்.

இதற்கு தான் ”முதலில் வருவோருக்கு முன்னுரிமை FIRST COME FIRST SERVE” என்று தொலைத்தொடர்பு விதி உள்ளது. அதன் அடிப்படையில் தான் ஆ.ராசா புதிய நிறுவனங்கள் உரிமம் பெற ஆவன செய்தார்.
#குற்றச்சாட்டு_2
உரிமம் பெற்ற புதிய நிறுவனங்கள் வேறு நிறுவனங்களுக்கு கொள்ளை லாபத்திற்கு உரிமத்தை விற்று காசாக்கினார்களாம். குறிப்பாக யுனிடெக் டெலிநாருக்கு விற்றது தவறாம். அதற்கு ராசா உரிமம் வழங்கியது தான் காரணமாம்
#பதில்
22 வட்டங்களில் 4ஜி அலைக்கற்றை உரிமம் பெற்றிருந்த IBSL நிறுவனம் தனது 96% பங்கை ₹.4800 கோடிக்கு ரிலையன்ஸ் குழுமத்திற்கு விற்றது. அது தான் தற்போதைய ரிலையன்ஸ் ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம்.
யுனிடெக் டெலிநாருக்கு விற்றது தவறு என்றால் IBSL நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு உரிமம் விற்றது தவறில்லையா.!? அதை பற்றி ஏன் யாரும் விவாதிக்கவில்லை.!?
யுனிடெக் டெலிநாருக்கு விற்றதும், IBSL ரிலையன்ஸ் ஜியோவிற்கு விற்றதும் தவறில்லை தான். அது ஒரு வியாபார நடவடிக்கை தான். இதற்கெப்படி ராசா பொறுப்பாக முடியும்.
தொலைத்தொடர்பு துறை அமைச்சகத்தின் நோக்கம் கீழ்காண்பவை தான்.
1.அலைக்கற்றை விற்பனை மூலம் அதிக வருமானம் ஈட்டுதல்
2. புதிய நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குதல்
3. அதன் மூலம் சந்தை போட்டியை உருவாக்குதல்
4. அதன் மூலம் கட்டண குறைப்பை உருவாக்குதல்
5. அதன் மூலம் எளிய விளிம்பு நிலை மனிதர்களும் தொலைதொடர்பு சேவையைப் பயன்படுத்த சூழல் உருவாக்குதல்
6. தொலைத்தொடர்பு துறையில் பணவீக்கத்தை கட்டுப்படுத்துதல்
7. அதன் மூலம் இந்திய பொருளாதார வளர்ச்சியில் பணவீக்கத்தை கட்டுப்படுத்திய பங்கினை ஆற்றுதல்
இதை தான் ஆ.ராசா செய்தார்.
ஆ.ராசாவுக்கு முன்னும் பின்னும் இருந்த அமைச்சர்கள் செய்யாத மக்கள் சேவையை தலித்தான ஆ.ராசா செய்தார். அதனால் பழைய நிறுவனங்களின் கொள்ளை லாபம் குறைந்தது.
அதனால் ஆத்திரமடைந்த பழைய நிறுவனங்கள் சிஎஜி வினோத் ராயின் துணையோடு கூட்டுச் சதியில் ஈடுபட்டு சூழ்ச்சி செய்து தலித்தான ஆ.ராசாவை பொய் குற்றச்சாட்டில் சிக்கவைத்து சிறைக்கு அனுப்பியது
இன்னோரு முறை திமுக மத்திய ஆட்சியில் பங்கு பெற்று, ஆ.ராசாவுக்கு தொலைத்தொடர்பு துறை அமைச்சகம் வழங்கப்படுமேயானால், அப்போதும் ஆ.ராசா இதைத் தான் செய்வார். “முதலில் வருவோருக்கு முன்னுரிமை FIRST COME FIRST SERVE” என்ற தொலைத்தொடர்பு விதியின் கீழ் புதிய நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவார். 2ஜி அழைப்பு சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். ஆ.ராசா தொலைத்தொடர்பு துறையில் புரட்சி செய்வார்
ஆனால்
அதுவரையில் இந்த ஆரிய பார்ப்பனிய முதலாளித்துவ இந்துத்வம் ஆ.ராசாவை உயிரோடு விட்டுவைத்திருக்குமா என்பது சந்தேகமே

கருத்துகள் இல்லை: